முகப்பு /செய்தி /உலகம் / கறுப்பின இளைஞரை நடுரோட்டில் வைத்து போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ... அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்!

கறுப்பின இளைஞரை நடுரோட்டில் வைத்து போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ... அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்!

போலீஸ் தாக்குதலில் கறுப்பின வாலிபர் மரணம்

போலீஸ் தாக்குதலில் கறுப்பின வாலிபர் மரணம்

அமெரிக்காவில் 29 வயது கறுப்பின வாலிபர் போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashingtonWashingtonWashington

அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞர் காவல்துறையினரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்ற மற்றொரு சம்பவம் அந்நாட்டில் மீண்டும் நடைபெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் மெம்பிஸ் நகரை சேர்ந்த கறுப்பின இளைஞர் டயர் நிக்கோலஸ். 29 வயதான இவர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி இரவு தனது வாகனத்தில் பயணித்தபோது சிக்னலில் வேகமாக நிற்காமல் வேகமாக சென்றுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் அவரை காரில் சென்று துரத்திப் பிடித்துள்ளனர். காரில் இருந்து இறங்கிய 5 போலீசாரும் அவரை சுற்றி வளைத்து சாலையில் வைத்தே சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.

இளைஞரை தரையில் படுக்கும்படி போலீசார் கூறிய நிலையில், அவரும் உத்தரவைக் கேட்டு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தரையில் படுத்துள்ளார். தொடர்ந்து பூட்ஸ் அணிந்த கால்களால் அவரை சரமாரியாக மிதித்தனர். அதன் பின்னர் கைகளை பின்னால் கட்டு எனக் கூறி இளைஞரை அடிக்கத் தொடங்கினர். தொடர் தாக்குதலால் வலி தாங்கமுடியாமல் கதறும் அந்த இளைஞர் அவர்கள் பிடியில் தப்ப முயல்கிறார்.

உடனடியாக கையில் இருந்த டேஸர் என்ற மின்சாரம் பாய்ச்சும் கருவியை பயன்படுத்தி நிக்கோலஸ் உடம்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை செய்கின்றனர். இவ்வாறு அந்த கறுப்பின வாலிபரை கொடூரமாக 5 காவலர்களும் தாக்க அவர் கதறுகிறார். இந்த சம்பவங்கள் அனைத்துமே காவலர்களின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் மயங்கி சரிந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி மூன்று நாள்களில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியான நிலையில் 5 போலீசாரும் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்தி கைதான 5 போலீசாரும் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட டெமட்ரியஸ் காலி, டடாரியஸ் பீன், டெஸ்மாண்ட் மில்ஸ் ஜூனியர், ஜஸ்டின் ஸ்மித், எம்மிட் மார்டின் ஆகிய ஐந்து போலீசார் மீது கொலை குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை இளைஞரின் தாயாரிடம் இருந்த மறைக்கும் விதத்தில் அந்த போலீசார் முதலில் நாடகமாடியுள்ளனர்.நிக்கோலஸ் குடி போதையில் வேகமாக வண்டி ஓட்டினார். நாங்கள் அவரை கைது செய்த போது பெப்பர் ஸ்பிரே அடித்து தப்ப முயன்றார் என்று பொய் கூறியதாக தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்போது தாக்குதல் வீடியோ வெளியானதில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது என்று கண்ணீருடன் கதறி தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Police arrested, USA, Viral Video