மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு லண்டனில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
நாற்பதாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரை நினைவுகூரும் வகையில் லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் நகரில் அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.
லண்டன் தமிழ் மன்றமும் லண்டன் பன்னாட்டு திமுக-வும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் லண்டல் வாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டு பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.