பனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவின் பனிக்கட்டிகள் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டத்தில் 38 சென்டிமீட்டருக்கும் அதிகமான உயர்வுக்கு வழி வகுக்கும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 11:14 PM IST
  • Share this:
இந்த கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றத்திற்கான இடை-அரசு குழுவில் (ஐபிசிசி) 2019ம் ஆண்டு, பெருங்கடல்கள் மற்றும் கிரையோஸ்பியர் பற்றிய சிறப்பு அறிக்கை அல்லது நீர் திட வடிவத்தில் இருக்கும் பூமியின் மேற்பரப்பு பகுதிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று நாசா தெரிவித்துள்ளது. பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலக கடல் மட்ட உயர்வுகளில் மூன்றில் ஒரு பங்கு  உள்ளது. ஐபிசிசி அறிக்கையின்படி, கிரீன்லாந்து 2000ம் ஆண்டு முதல் 2100ம் ஆண்டுக்கு இடையில் உலக கடல் மட்ட உயர்வுக்கு 8 முதல் 27 செ.மீ வரை பங்களிக்கும் என்றும் அண்டார்டிகா 3 முதல் 28 செ.மீ வரை பங்களிக்கக்கூடும் என்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் தலைமையிலான 'ஐஸ் ஷீட் மாடல் இன்டர்கம்பரிசன் ப்ராஜெக்ட்' (ஐ.எஸ்.எம்.ஐ.பி 6) இன் கண்டுபிடிப்பு என்று 'தி கிரையோஸ்பியர்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் "பனிக்கட்டிகள் எவ்வளவு உருகும் என்பதை பொருத்துதான் எதிர்காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரும் என்பதை கண்டறிய முடியும்" என்று அமெரிக்காவின் பஃபல்லோ பல்கலைக்கழகத்தின் திட்டத் தலைவர் மற்றும் பனி விஞ்ஞானியுமான சோஃபி நோவிக்கி கூறியுள்ளார்.

'ஐ.எஸ்.எம்.ஐ.பி 6' இன் வலிமை என்னவென்றால், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பனிக்கட்டிகளை ஒன்றிணைத்து, பின்னர் கடல் மற்றும் வளிமண்டல மாதிரிகளின் பிற சமூகங்களுடன் இணைத்து, பனிக்கட்டிகளுக்கு என்ன நேரிடும் என்பதை நன்கு புரிந்துகொள்வது என்று நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த போது கிரீன்லாந்து பனிக்கட்டி 'ஐ.எஸ்.எம்.ஐ.பி 6' முயற்சியை வழிநடத்திய ஹெய்கோ கோயல்சர் கூறியுள்ளார்.


வெப்பமயமாதலால் காற்று வெப்பநிலையுடன் பனிக்கட்டியின் மேற்பரப்பு உருகும் மற்றும் கடல் வெப்பநிலையை வெப்பமயமாக்குவதால் கடலில் பனிப்பாறைகள் உருவாகின்றன. அது கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள் கடல் மட்ட உயர்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 'ஐ.எஸ்.எம்.ஐ.பி 6' என்ற குழு 2015 மற்றும் 2100ம் ஆண்டுக்கு இடையில் கடல் மட்ட உயர்வு குறித்து கணிக்க எதிர்கால காலநிலைக்கு ஐபிசிசி அமைத்துள்ள இரண்டு வெவ்வேறு காட்சிகளை ஆராய்ந்தது.

அதில் ஒன்று கார்பன் உமிழ்வு வேகமாக அதிகரித்து மற்றொன்று குறைந்த உமிழ்வுகளுடன் கூடியதாகும். அதிக உமிழ்வு சூழ்நிலையில், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் 2100ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் சுமார் 3.5 அங்குலங்கள் (9 செ.மீ) உயர வழிவகுக்கும் என்றும் குறைந்த உமிழ்வு சூழ்நிலையில், பனிக்கட்டியிலிருந்து உருகும் தண்ணீர் உலக கடல் மட்டத்தை சுமார் 1.3 அங்குலங்கள் (3 செ.மீ) உயர்த்தும் என்று அவர்கள் கண்டறிந்தனர். மேலும் தொழில்துறைக்கு முந்தைய காலங்களுக்கும், இப்போதுக்கும் இடையில் வெப்பமயமாதல் காரணமாக பனிக்கட்டிகள் உருகுவது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய ஆய்வுகள் 2100ம் ஆண்டளவில் உலக கடல் மட்ட உயர்வுக்கு ‘லாக்குடு இன்’ பங்களிப்பை, கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு கால் அங்குலமாக (6 மில்லிமீட்டர்) இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளன. அண்மையில் வெப்பமயமாதல் காரணமாக எதிர்கால காலநிலை மாற்றத்தில் பனிக்கட்டிகள் உருகுவது கடல் மட்ட உயர்வுக்கு காரணமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவே, 'ஐ.எஸ்.எம்.ஐ.பி 6' குழு அண்டார்டிக் பனிக்கட்டியை ஆய்வு செய்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் மேற்கில், சூடான கடல் நீரோட்டங்கள் பெரிதாக மிதக்கும் பனிக்கட்டிகளின் அடிப்பகுதியை அரிக்கின்றன. இதனால் நீர் இழப்பு ஏற்படுகிறது. கிழக்கு அண்டார்டிக் கடல் அடர்ந்த பனிக்கட்டிகளை பெறக்கூடும், ஏனெனில் வெப்பநிலை அதிகரித்த பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது. எனவே, அண்டார்டிக் பனிக்கட்டியிலிருந்து பனி இழப்பு கணிப்பது மிகவும் கடினமானது என்றும் கூறப்படுகிறது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading