காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பெருங்கடலில் பனி உருகி அதன் மூலம் கடல்வாழ் உயிரினங்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் விளக்கியுள்ளனர்.
ஆர்டிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் PDV என்னும் வைரஸ் தாக்குதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடல்வாழ் உயிரினங்களைப் பாதித்து வருகிறது. ஆர்டிக் பெருங்கடல் மட்டுமல்லாது சமீபத்திய காலங்களில் வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தாலே PDV வைரஸ் அதிகப்படியாகப் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆர்டிக் பனி 12.8 சதவிகிதம் உருகுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு PDV தாக்குதல் உயரத் தொடங்கினாலும் 2009-ம் ஆண்டு இதனது பாதிப்பு கடுமையான உச்சத்தை அடைந்து பல கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியது. இந்த கடல்வாழ் உயிரினங்கள் மூலம் PDV வைரஸ் பரவி வருவதாகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.
மேலும் பார்க்க: சாம்சங் ’M’ சீரிஸின் கீழ் புதியதொரு ஸ்மார்ட்போன்... வெளியீடு எப்போது..? இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.