Home /News /international /

பிலிகேட்ஸை விவாகரத்து செய்தது குறித்து முதன் முதலில் மனம் திறந்து பேசிய மெலிண்டா கேட்ஸ்!

பிலிகேட்ஸை விவாகரத்து செய்தது குறித்து முதன் முதலில் மனம் திறந்து பேசிய மெலிண்டா கேட்ஸ்!

மெலிண்டா கேட்ஸ்

மெலிண்டா கேட்ஸ்

வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்ட சமயங்களில் நாட்கணக்கில் அழுதது குறித்தும், பிரிவை தொடர்ந்து எப்படி வாழப் போகிறோம் என்ற கேள்வி தனக்குள் எழுந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார் மெலிண்டா கேட்ஸ்.

வெற்றியின் உச்சிக் கொம்பில் நீங்கள் அமர்ந்திருந்தாலும், கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு உங்கள் வாழ்க்கையில் விதிவிலக்கு இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது தான் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் ஆகியோரின் பிரிவு ஆகும். சுமார் 27 ஆண்டு காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் விவாகரத்து பெற்றனர்.

இருவரும் விவாகரத்து பெற்று ஏறத்தாழ ஓராண்டு நெருங்கிவிட்டது. இத்தகைய சூழலில் தான் சிபிஎஸ் நியூஸ் மீடியாவுக்கு கடந்த வியாழக்கிழமை பேட்டி அளித்தார் மெலிண்டா கேட்ஸ். அப்போது, வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்ட சமயங்களில் நாட்கணக்கில் அழுதது குறித்தும், பிரிவை தொடர்ந்து எப்படி வாழப் போகிறோம் என்ற கேள்வி தனக்குள் எழுந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார் அவர்.

இதுகுறித்து மெலிண்டா கேட்ஸ் கூறுகையில், “ஆம். இதை சொல்வது உண்மையில் முக்கியமானது என கருதுகிறேன். கொஞ்சம் பாருங்க, நான் பல நாட்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். அதாவது, பல நாட்கள் நான் வெறுமனே தரையில் அல்லது கார்பெட் மீது படுத்துக் கிடப்பேன். அது எனக்கு பழகிவிட்டது. அது எப்படி இருந்திருக்கும்? நான் எப்படி எழுந்திருப்பேன்? நான் எப்படி வாழப் போகிறேன் என்ற சிந்தனைகள் எழும்.

ALSO READ |  வொர்க் ஃப்ரம் ஹோம்-க்கு குட்பை.. ஊழியர்களை ஆபீஸ்-க்கு அழைக்கும் கூகுள்

சில நாட்கள், எனக்கு கோபம் வந்து விடும். அதாவது, அந்த அளவுக்கு வலி இருந்தது. ஆனாலும், அன்றைய நாளின் முடிவில், என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்று விடுவேன். வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை நோக்கி நான் சென்று கொண்டிருப்பதாக சில சமயங்களில் உணர்வேன். ஒரு பெரும் பாடப் புத்தகத்தில் சாதாரண பக்கம் ஒன்றை போல நான் மாறிக் கொண்டிருப்பதாக இப்போது உணர்கிறேன். அதாவது இது 2022 காலம். அடுத்து என் வாழ்க்கையில் என்ன காத்திருக்கிறது என்பது குறித்து உண்மையிலேயே ஆச்சரியத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்’’ என்றார் மெலிண்டா கேட்ஸ்.

அதே சமயம், தற்போது வரை பில் கேட்ஸுடன் நட்புறவில் இருப்பதை மெலிண்டா ஒப்புக் கொண்டார். பணி நிமித்தமான தொடர்பு அவருடன் இருப்பதை மெலிண்டா ஆமோதித்தார்.

பில்கேட்ஸ் குறித்து வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும், தனது தரப்பு விளக்கங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தி விட்டேன் என்று மெலிண்டா கேட்ஸ் குறிப்பிட்டார்.

ALSO READ |  ரஷ்யாவின் அடுத்த இலக்கு இதுதான்... உக்ரைனை உஷார் படுத்திய எலான் மஸ்க்!
 

முன்னதாக, பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோரது திருமணம் கடந்த 1994ஆம் ஆண்டில் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். விவாகரத்து தொடர்பாக இந்தத் தம்பதியர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “நாங்கள் அற்புதமான பிள்ளைகள் மூவரை வளர்த்தெடுத்தோம். மேலும், உலகெங்கிலும் மக்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான அறக்கட்டளையை கட்டமைத்தோம்’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Bill Gates

அடுத்த செய்தி