பலரது கவனத்தையும் ஈர்த்த மெகான் மெர்க்கலின் ரூ.3 லட்சம் மதிப்பிலான உடை - அப்படி என்ன ஸ்பெஷல்?

பலரது கவனத்தையும் ஈர்த்த மெகான் மெர்க்கலின் ரூ.3 லட்சம் மதிப்பிலான உடை - அப்படி என்ன ஸ்பெஷல்?

Meghan markle

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ஹாரியின் மனைவி மெகான் மெர்க்கல், நேர்க்காணல் ஒன்றில் அணிந்திருந்த உடை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • Share this:
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ஹாரி மற்றும் அவரது காதல் மனைவி மெகான் மெர்க்கல், அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இது குறித்து ஆலோசனை நடத்திய இங்கிலாந்து ராணியும் அவர்களது முடிவுக்கு ஒப்புதல் கொடுத்தார். இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து வெளியேறி அவர்கள் இருவரும் வட அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இருப்பினும், இங்கிலாந்து நாளிதழ்களில் பிரின்ஸ் ஹாரி மற்றும் மனைவி மெகான் மெர்க்கல் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து பல செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதில் அதிருப்தி அடைந்த ஹாரியும், மெர்க்கலும் முதன்முறையாக தங்களது தரப்பு விளக்கத்தை தொலைக்காட்சி முன்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் நேர்காணலை பிரபல தொலைக்காட்சி நெறியாளர் ஆர்ப் வின்ஃபிரே (Oprah Winfrey)  செய்துள்ளார்.

இந்த நேர்க்காணல் தற்போது பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியுள்ளது. நேர்காணல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புரோமோ வீடியோக்களில், இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது மெகான் மெர்க்கல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தங்கள் மீது வேண்டுமென்று தவறான தகவல்களும், பொய் செய்திகளும் பரப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதனை இங்கிலாந்து அரண்மனையும் ரசித்து வருவதாக மெகான் மெர்க்கல் கூறியுள்ளார். அவரது விமர்சனங்கள் விவாதப் பொருளாக மாறியிருக்கும் அதேவேளையில், நேர்காணலின்போது மெர்க்கல் அணிந்திருந்த உடையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே முதல் குழந்தைக்கு தாயாக இருக்கும் மெர்க்கல், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். நேர்க்காணலின்போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற உடை பலருக்கும் பிடித்துள்ளது. நடிகையான அவர் எப்போதும் பேஷன் மீது அலாதி பிரியம் உடையவர் என்பதால், பேஷன் உலகத்தினர் மெர்க்கலின் உடை தேர்வை எப்போதும் கவனித்து வருகின்றனர். ஆர்ப் வின்ஃபிரேவுடனான நேர்காணலின்போது மெர்க்கல் கருப்பு நிற சில்க் உடையை அணிந்திருக்கிறார்.

ஜார்ஜெட் உடையில் வி வடிவிலான கழுத்து (V Neck) மற்றும் முன்புறத்தில் வெள்ளை நிறத்திலான எம்பிராய்டர் என பார்ப்பவர்களுக்கு காஸ்டிலியான லுக்கை கொடுத்துள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றின் வேறுபாடு ஆடைக்கு சில தன்மையைக் கொடுத்தது. சமச்சீரற்ற ஹெம்லைன் கொண்ட எண்ணும் பொருந்தக்கூடிய பெல்ட்டைக் கொண்டிருந்தது. இது ஒரு அழகான மகப்பேறு உடை. கர்ப்ப காலத்துக்கு உகந்த சரியான உடையும், பேஷன் லுக்கில் எந்த சமரசமும் இல்லாத வண்ணம் மெர்க்கல் உடையை தேர்வு செய்து அணிந்திருப்பதாக பேஷன் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பிரேஸ்லெட், நெக்கலஸ் அவரது உடை அலங்காரத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இருந்ததன. குறிப்பாக, மெர்க்கல் அணிந்திருந்த பிரேஸ்லெட், அவருடைய மாமியார் இளவரசி டையானாவுடையது என பலரும் கூறியுள்ளனர். மெர்க்கலின் உடை அலங்காரத்துக்கு ஏற்ப ஹாரியின் கோட் சூட் உடையும் பொருத்தமாக இருந்தது. இதில் சுவாரஸ்யாமான விஷயம் என்னவென்றால் மெர்க்கல் அணிந்திருந்த உடையின் பிராண்ட் (Giorgio Armani ) ஆகும். ஏறத்தாழ அந்த உடையின் மதிப்பு சுமார் ரூ.3,27,429 ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 
Published by:Ram Sankar
First published: