நெப்டியூன் கோளுக்கு அருகே சூரிய குடும்பத்துக்குள் வால்நட்சத்திரம் ஒன்று நுழைந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்ப உருவாக்கத்தில் உறைந்து எஞ்சியவையே வால் மீன்கள் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சூரிய குடும்பங்கள் உருவானது எப்படி? என்ற தகவல் வால் நட்சத்திரங்களில் புதைந்திருக்கலாம் என கருதும் விஞ்ஞானிகள், அவை குறித்து ஆய்வு நடத்துவது அவர்களுக்கு எப்போதும் புதிய எதிர்பார்ப்பையும் வியப்பையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், சூரியக் குடும்ப சுற்றுவட்டப்பாதையில் புதிதாக வால் நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த பொருள் வால்நட்சத்திரத்தை விடவும் பெரிதாக இருப்பதாகவும், சூரியனை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
2014 UN271 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வால்நட்சத்திரம் சூரியனைக் கடக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2031ஆம் ஆண்டுக்குள் சனிக் கோளுக்கு அருகாமையில் அந்த வால் நட்சத்திரம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கு முன்பே சுற்றுவட்டப்பாதையில் சூரியனைக் கடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். டார்க் எனர்ஜி சர்வே (Dark Energy Survey) 2014 முதல் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கும் அவர்கள், 100 முதல் 370 கிலோ மீட்டர் அகலம் இருக்கலாம் என கணித்துள்ளனர்.
முதற்கட்ட ஆய்வுகளில் சிறிய கோளாக கூட இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன் நகர்வை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், அதன் தொலைவு சூரியனில் இருந்து 29 வானியல் யூனிட்டில் (Astronomical Units) இருப்பதாக கூறியுள்ளனர். சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவை 1 வானியல் யூனிட் (Astronomical Units) என கணக்கிடும் ஆய்வாளர்கள் அதனடிப்படையில் 29 யூனிட் தொலைவில் அந்த வால் நட்சத்திரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
முதல் முதலாக கண்டுபிடிக்கும்போது அந்த தொலைவில் இருந்த வால் நட்சத்திரம் தற்போது 7 வானியல் யூனிட் பயணித்து 22 வானியல் யூனிட் தொலைவில் இருக்கிறது. அதாவது, நெப்டியூன் கோளுக்கு மிக அருகாமையில் இந்த வால்நட்சத்திரம் உள்ளது. இதே வேகத்தில் பயணித்தால் சனிக் கோளுக்கு அருகாமையில் 10.9 வானியல் யூனிட் வரை வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனுடைய சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்யும்போது சூரிய குடும்பத்துக்குள் இருக்கும் சுற்றுவட்ட பாதையுடனும், வெளிப்புறத்தில் இருக்கும் இன்டர்ஸ்டெல்லர் விண்வெளி எல்லைக்கும் இடையே அமைந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இன்டர்ஸ்டெல்லர் ஸ்பேஸ் என்பது ஹெலிஸ்போருக்கு அப்பால், அதாவது சூரிய ஒளி மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருக்கும் இடம் ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விஞ்ஞானிகள் கணிப்பின்படி, சனிக்கோளை நெருங்குவதற்குள் சூரியனைக்கு அருகாமையில் செல்லக்கூடிய வாய்ப்பு இந்த மிகப்பெரிய வால் நட்சத்திரத்துக்கு இருப்பதால், அந்த சமயத்தில் சூரியனின் வெப்பத்தால் முழுமையான வால் நட்சதிரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். வெப்பம், காற்றின் வேகம் இதன் உருவத்தை மாற்றும் என யூகித்துள்ளனர். 2014 UN271 வால் நட்சத்திரமானது இன்டர்ஸ்டெல்லர் ஸ்பேஸில் இருந்து சூரிய ஒளிக்குடும்பத்துக்குள் முதன் முறையாக நுழைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரத்துக்கு 92,000 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னோக்கி நகர்ந்து வரும் இந்த வால் நட்சத்திரத்தை அனைத்து தொலை நோக்கி கருவிகள் கொண்டும் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.