கடலை கண்காணிக்க ரோபோ மீன்... புதிய முயற்சியில் அறிவியல் ஆய்வாளர்கள்!

கடல் பாதுகாப்புக்கும் ஒரு சிறந்த கண்காணிப்பு சென்சார் ஆகவே இந்த ரோபோ ட்யூனா இருக்கும் என ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடலை கண்காணிக்க ரோபோ மீன்... புதிய முயற்சியில் அறிவியல் ஆய்வாளர்கள்!
ட்யூனாபாட்
  • News18
  • Last Updated: September 20, 2019, 7:27 PM IST
  • Share this:
ட்யூனா மீனைப் போன்றே தோற்றமளிக்கும் இந்த ரோபோ மீன், உயிருள்ள மீனைப் போலவே நீந்திக்கொண்டே கடலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹிலாரி பர்த். கடலுக்கு அடியில் மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு உதவுவதற்காகவே ரோபோ மீன்களை உருவாக்கியுள்ளார் ஆராய்ச்சியாளர். 25 செ.மீ நீளத்தில் வால் எல்லாம் வைத்து ட்யூனா மீன்களின் தோற்றத்துடனே இந்த ரோபோ மீன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விநாடிக்கு 1 மீட்டர் தூர அளவு நீந்தும் திறன் கொண்டதாக இந்த ரோபோ ட்யூனா மீன்கள் உள்ளன. நீந்துவதற்காக உடலை அசைக்கும் திறனும் இந்த ரோபோ மீனுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விநாடிக்கு 10 முறை இந்த ரோபோ மீன் தன் உடலை அசைக்கும். கூடுதலாக இந்த மீனுக்கு சென்சார் பொருத்தும் திட்டத்தையும் ஆய்வாளர் செயல்படுத்த உள்ளார்.


இதன் மூலம் கடல் உயிரின ஆராய்ச்சிக்கு மட்டுமல்லாது கடல் பாதுகாப்புக்கும் ஒரு சிறந்த கண்காணிப்பு சென்சார் ஆகவே இந்த ரோபோ ட்யூனா இருக்கும் என ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: டெங்குவைத் தடுக்க தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா- இந்தியாவுக்கு வர 10 ஆண்டுகள் ஆகலாம்!

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்