ஊரையே எதிர்த்து மகள்களின் படிப்புக்காக தினமும் 12 கி.மீ பயணிக்கும் தந்தை..!

’என் மகன்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல் மகள்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்’.

ஊரையே எதிர்த்து மகள்களின் படிப்புக்காக தினமும் 12 கி.மீ பயணிக்கும் தந்தை..!
மகளுடன் மியா கான்
  • News18
  • Last Updated: December 6, 2019, 4:53 PM IST
  • Share this:
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மியா கான் என்பவர் தனது மகள்களின் கல்விக்காக தினமும் 12 கி.மீ பயணித்து குழந்தைகளின் பள்ளி முடியும் வரையில் அங்கேயே இருந்து அழைத்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் ஸ்வீடன் நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி ஒன்றை நடத்தி வருகிறது. கல்வியில் மிகவும் பின் தங்கிய பகுதியில் தனது பெண் பிள்ளைகளின் கல்விக்காக அந்த தந்தை செய்து வரும் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மியா கானின் கதையை ஸ்வீடன் தொண்டு நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட மியா கானுக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தான் பெறாத கல்வியை தனது பிள்ளைகள் பெற வேண்டும் என உறுதியாய் இருக்கும் மியா கான், “எனது வேலையே எனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதுதான். என் மகன்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல் மூன்று மகள்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.


எங்கள் பகுதியில் பெண் மருத்துவர் என ஒருவர் இருந்ததே இல்லை. ஆக, பெண் கல்வி என்பது மிகவும் எவ்வளவு மதிப்புமிக்கது எனப் புரிந்துகொள்ளுங்கள். தினக்கூலியாகத் தான் பணி செய்து வருகிறேன். என்னால் முடியவில்லை என்றால் மகன்கள் அழைத்துச் செல்வர்” என்றார்.


இதுபோன்ற தந்தைகள் பாராட்டுக்குரியவர்கள் எனப் பலரும் மியா கானை பாராட்டி வருகின்றனர்.மேலும் பார்க்க: பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஐடி ஊழியர்..!
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்