தமிழக விவசாயி ஒருவரின் தற்கொலையைக் ஆவணப்படுத்திய இத்தாலிய புகைப்படக் கலைஞருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றங்கள் இந்த பூமியை பெருமளவு சிதைத்து வரும் வேளையில் உலகின் பரதரப்பிலிருந்தும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் கெடுதல்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் இத்தாலிய புகைப்படக் கலைஞர் ஒருவர் தமிழக விவசாயி ஒருவரின் தற்கொலை மூலம் ஒரு புகைப்பட விழிப்புணர்வு ஆவணத்தை உருவாக்கியுள்ளார். இத்தாலியில் புகைப்பட ஊடகவியலாளராக உள்ள ஃபெடரிகோ பொரெல்லா இந்தியாவில் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளைத் தொடர்ந்து படித்து வந்துள்ளார்.
இப்பிரச்னை குறித்து முழுவதுமாக அறிய இந்தியா வந்தவர் தமிழகத்தில்தான் விவசாயிகளின் தற்கொலை அதிகம் நடப்பதாக அறிந்து தமிழக விவசாயிகளின் நிலையை ஒரு புகைப்படத் தொகுப்பாக ஆவணப்படுத்த நினைத்தார். ‘Five Degrees' என்ற தலைப்பின் கீழ் தமிழக விவசாயி ஒருவரின் தற்கொலைக்குப் பின்னர் அவரது நிலம், விவசாயத் தொழில், மனைவி, குடும்பம் குறித்து புகைப்பட ஆவணம் ஒன்றை விழிப்புணர்வுக்காக உருவாக்கியுள்ளார்.
இந்த ஆவண புகைப்படத் தொகுப்புக்காக 2019-ம் ஆண்டு சோனி சர்வதேச புகைப்பட விருது ஃபெடரிகோ பொரெல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: அளவில் சிறியதாக மாறும் மிருகங்கள்... அழிவை நோக்கி ஓர் இனம்..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.