Home /News /international /

அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 16வயது சிறுமி!

அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 16வயது சிறுமி!

கிரேட்டா தன்பர்க், நோபல் பரிசை வெல்லும் பட்சத்தில், 17வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப்பை விட இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் சிறுமி என்ற சிறப்பையும் இவர் பெறுவார்.

  • News18
  • Last Updated :
    உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டி போராடும் ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த போர் பதற்றத்தை தவிர்த்ததற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கிய நிலையில், ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

    பருவநிலை மாற்றம் சாதாரண விசயமல்ல, இந்த உலகத்தின் அழிவுக்கான திறவுகோல், உலகத் தலைவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தன்னந்தனி ஆளாக பல போராட்டங்களில் ஈடுபட்டவர் கிரேட்டா தன்பர்க்.

    மேலும், கடந்த ஆண்டு முதல் வெள்ளி தோறும் பள்ளிக்குச் செல்லாமல், பாராளுமன்றத்தில் தனியாளாக பருவநிலை மாற்றம் குறித்த போராட்டங்களை நடத்திவந்தார்.

    இவரது இந்தப் போராட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வெள்ளி தோறும் பள்ளிகளுக்குச் செல்லாமல் பருவநிலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

    இவரது இந்த முயற்சியை கெளரவிக்கும் விதமாக டைம் இதழ் வெளியிட்ட 2018-ம் ஆண்டின் செல்வாக்கு மிக்க இளைஞர் பட்டியலில் கிரேட்டா தன்பர்க் பெயரும் இடம் பெற்றிருந்தது.

    2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனி நபர்களின் பெயர்களும், 85 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    கிரேட்டா தன்பர்க், நோபல் பரிசை வெல்லும் பட்சத்தில், 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப்பை விட இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் சிறுமி என்ற சிறப்பையும் இவர் பெறுவார்.

    நோபல் பரிசுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் கிரேட்டா தன்பர்க்.

    Also See:
    Published by:Mari S
    First published:

    Tags: Greta Thunberg, Noble prize for Peace

    அடுத்த செய்தி