விவசாயிகளை ஆதரித்து பேசிய கமலா ஹாரிஸ் உறவினரின் உருவப்படங்களை எரித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

மீனா ஹாரிஸ் புகைப்படத்தை எரித்த இந்து அமைப்பினர்

என்னை மிரட்டமுடியாது. என்னை மெளனமாக்கவும் முடியாது” என ட்வீட் செய்திருக்கிறார் எழுத்தாளரும், அமெரிக்க துணை அதிபரின் உறவினருமான மீனா ஹாரிஸ்.

 • Share this:
  விவசாயிகளுக்கு ஆதரவாக ரிஹான்னா, க்ரேட்டா தன்பெர்க், மீனா ஹாரிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள், செயற்பாட்டாளர்கள் ட்வீட் செய்ததையடுத்து, இந்திய பிரபலங்கள் இந்திய விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் எனவும், உள்நாட்டு பிரச்சனைகள் பேசித் தீர்த்துக்கொள்ளப்படும் என்னும் வகையிலும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சொற்போராக நடந்துகொண்டிருந்த இந்த முரண் தற்போது உருவப்படங்களை எரித்து எதிர்ப்பைக் காட்டும் செயலாக வலுத்துள்ளது.

  டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசிய வெளிநாட்டினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று குவிந்த United Hindu Front ஆதரவாளர்கள், பாப் பாடகியும், தொழிலதிபருமான ரிஹான்னாவின் உருவப்படங்கள், காலநிலை செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க்,எழுத்தாளரும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினருமான மீனா ஹாரிஸ் ஆகியோரின் உருவப்படங்களை எரித்திருக்கிறார்கள்.

  மீனா ஹாரிஸ் ட்வீட்


  மீனா ஹாரிஸ் ட்வீட்


  மீனா ஹாரிஸின் உருவப்படத்தை எரித்த இந்து அமைப்பினர் : PTI


  United Hindu Front ஆதரவாளர்கள் தனது உருவப்படத்தை எரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்வீட் செய்துள்ள மீனா ஹாரிஸ் “ என்னை மிரட்டமுடியாது. என்னை மெளனமாக்கவும் முடியாது” என ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.
  Published by:Gunavathy
  First published: