• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 75 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மெக்கானிக் - நினைவுப் பரிசாக கிடைத்த ஸ்பேனர்

75 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மெக்கானிக் - நினைவுப் பரிசாக கிடைத்த ஸ்பேனர்

Bryan webb mechanic

Bryan webb mechanic

ஓய்வுக்கான காலம் நெருங்கியவுடன், ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் வேலை செய்கிறேன்’ என சொல்லி 25 ஆண்டுகளை கடத்தியுள்ளார்.

  • Share this:
இங்கிலாந்தில் 75 ஆண்டுகள் ஒரே  நிறுவனத்தின் பணியாற்றிய முதியவர் ஒருவர், தனது 90 வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

1946ம் ஆண்டு. உலகம் அப்போது தான் இரண்டு உலகப் போர்களையும் கடந்து, காயங்களுக்கும், வலிகளுக்கும் மருந்து தேடிக் கொண்டிருந்தது. சரியாக சொன்னால், மனிதன் நிலவில் தரையிறங்கியதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால். இந்தியா, பிரிட்டீஷ் ஆதிக்கத்திலேயே இருந்தது. கம்ப்யூட்டருக்கு ஹார்ட் டிஸ்க் என்பதெல்லாம் நினைத்துக்கூட பார்க்காத நேரம் அல்லது ஏலியன் கான்செப்டாக இருந்த காலம்.

அந்த நேரத்தில் இங்கிலாந்தில் வசித்துக் கொண்டிருந்த இளம் பிரையன் வெப், வேலை தேடி வோக்ஸ்கால்(Vauxhall) நிறுவனத்துக்கு சென்றார். அப்போது பணியில் சேர்ந்த அவர், கடந்த ஏழு தசாப்தங்களாக, அதாவது 75 ஆண்டுகளாக அதே கம்பெனியில் பணியாற்றி இப்போது ஓய்வு பெற்றுள்ளார்.

அவருடைய உழைப்பு இப்போதைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இதுநாள் வரையில் பணியாற்றிய அவருடைய அனுபவம் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேலை தேடி வோக்ஸ்கால் கம்பெனிக்கு செல்கிறார். இளைஞரான அவர், துறைக்கு  புதியவர் என்பதால் தொழில் பழகுநராக பணியில் சேர்கிறார். தொடக்கத்தில் மெக்கானிக்காக பணியாற்றிய பிரையன், படிப்படியாக உயர்ந்து பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

Also read: உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்சுக்கு அதிர்ச்சி கொடுத்த அவரது ‘மகள்’!

கடந்த 34 ஆண்டுகளாக வாரண்டி அட்மினிஸ்ட்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். ஓய்வுக்கான காலம் நெருங்கியவுடன், ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் வேலை செய்கிறேன்’ என சொல்லி 25 ஆண்டுகளை கடத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய பிரையன், “உழைப்பு என்னை இளமையுடன் வைத்துக் கொள்வதாக நான் உணர்ந்தேன். அதனால் தான் அதற்கு நான் ஓய்வு கொடுக்க விரும்பவில்லை. ஆரம்பத்தில் இந்த தொழில் கொஞ்சம் கடினமாக இருந்தது. பழக பழக எளிதாகி விட்டது.

கார்கள் மாறின, காலம் மாறின. இருந்தும் நான் எனது பணியை தொடர்ந்தேன். இப்போது அதற்கு ஓய்வு கொடுத்துள்ளேன்” என பிரையன் வெப் தெரிவித்துள்ளார். எதிர்காலம் குறித்து பேசும்போது ‘நான் வேலையை மிஸ் செய்தாலும் எதிர்வரும் நாட்களில் ஒரு கப் தேநீரும், மதிய நேரத்தில் ஒரு குட்டி தூக்கத்தையும் எதிர்நோக்கி உள்ளேன்’ என பிரையன் உருக்கமாக கூறியுள்ளார்.

Also read:  இவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகரா? யார் இந்த ஹென்ரி கேவில்?

சுமார் 75 ஆண்டுகள் பணியாற்றிய அவருக்கு கம்பெனி சார்பில் நினைவு பரிசாக ஸ்பேனர் ஒன்று கொடுக்கப்பட்டது. அத்துடன், ‘வாழ்நாள் ஊழியர் விருது’ என அவர் பெயர் பொறித்த உலோக பட்டயம் ஒன்றும் கொடுத்து, வோக்ஸ்கால் கம்பெனி நிர்வாகம் பிரையனை கவுரவித்துள்ளது. பிரையனின் உழைப்புக்கு சமூகவலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: