முகப்பு /செய்தி /உலகம் / கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் உஷாராக இருங்கள்... வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் உஷாராக இருங்கள்... வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaToronto Toronto

கனடாவில் வெறுப்பு உணர்வும், பிரிவினைவாத வன்முறை செயல்களும், இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையும் அதிகரித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. எனவே, கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த பிரிவினைவாத குழுவின் வரலாறு அனைவருக்கும் தெரியும், எனவே இவர்களின் செயல்களை கனடா அரசு தடுக்காமல் ஏற்கமுடியாத ஒன்று என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு 1980,90 களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோஷத்தை எழுப்பி பிரிவினைவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டுவந்தன. இந்நிலையில், கனடாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தலைதூக்கியுள்ள பின்னணியில்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு வசிக்கும் இந்தியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீ.. அலெர்ட் கொடுத்து 6பேரின் உயிரை காத்த அலெக்சா கருவி

"இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையை கனடாவில் உள்ள இந்திய தூதரகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் கண்காணித்து வருகின்றன. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கனடா அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து நீதி வழங்கும் செயலை கனடா அரசு இதுவரை செய்யவில்லை.

top videos

    எனவே, இத்தகையை சூழலில் மாணவர்களும், குடிமக்களும் கனடா நாட்டின் ஒடோவா, டொரான்டோ அல்லது வான்கவர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்களின் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். MADAD என அரசு போர்டலிலும் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு தொடர்பு கொண்டு உதவ இவை பயன்படும்." இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Canada, International