ஹோம் /நியூஸ் /உலகம் /

பாத்திரம் கழுவ சொன்னதால் ஆத்திரம்.. வேலையை உதறிய மெக்டோனால்டு ஊழியர்

பாத்திரம் கழுவ சொன்னதால் ஆத்திரம்.. வேலையை உதறிய மெக்டோனால்டு ஊழியர்

மெக்டோனால்ட் நிறுவனம்

மெக்டோனால்ட் நிறுவனம்

பாத்திரம் கழுவ சொன்னதால் ஆத்திரமடைந்து வேலையை பாதியில் உதறிய மெக்டோனால்டு ஊழியரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரனாலது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaWellingtonWellington

  உலகின் பிரபலமான துரித வகை உணவு விற்பனை நிறுவனமான மெக்டோனல்ட் அனைத்து முன்னணி நாடுகளிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, கோபத்தில் திடீரென வேலையை விட்டு ராஜினாமா செய்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பியான் மெக்காலம். இவர் அங்குள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் பணி புரிந்து வருகிறார்.

  இவர் தனது கடையில் வழக்கம் போல பணி புரிந்த போது அவரது மேனேஜர் பியானை அழைத்து சிங்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவச் சொல்லியிருக்கிறார். தன்னிடம் மேனேஜர் அவ்வாறு கூறியது பியானுக்கு கோபத்தை கிளப்பியுள்ளது. சடாரென தனது செல்போனை எடுத்த பியான், செல்பி வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.

  உணவகத்தின் சிங்கை காண்பித்து எனது மேனேஜர் இந்த பாத்திரங்களை கழுவ சொல்கிறார். பாத்திரம் கழுவுவது எனது வேலை இல்லை. எனவே, நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறுகிறேன் என்றார்.அருகே இருந்து சக ஊழியர்கள் பியானின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பியானை அவ்வாறு செய்ய வேண்டாம் என அவர்கள் சமாதானம் செய்த போதும் பியான் அதை கண்டுகொள்ளாமல், தனது செல்பி வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றிவிட்டு கெத்தாக கடையை விட்டு வெளியேறியுள்ளார்.

  இதையும் படிங்க: காதலனின் தொலைப்பேசியை வேறு பெண் எடுத்ததால் ஆத்திரம்.. வீட்டை தீவைத்து கொளுத்திய காதலி

  இந்த டிக்டாக் வீடியோ படுவேகமாக வைரலாகியுள்ளது. வீடியோ பதிவான ஒரு நாளுக்குள் இதை சுமார் 29 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சிலர் பியானின் செயலை கொண்டாடினாலும், பலர் இதெல்லாம் ஓவர் என்று கண்டித்துள்ளனர். 20 நிமிடம் கூட தேறாத எளிய வேலையை செய்யக்கூடத் தகுதியில்லாத சோம்பேறிகளாக இந்த கால இளைஞர்கள் உள்ளனர் என கண்டித்து கமெண்ட் செய்துள்ளனர்.பலரும் அந்த வீடியோ பதிவை வறுத்தெடுக்கத் தொடங்கியதால் டிக் டாக் தளத்தில் இருந்து வீடியோ டெலீட் செய்யப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: New Zealand, Tik Tok, Viral News