ஹோம் /நியூஸ் /உலகம் /

அது போன்ற மக்கள் திரளை இனி காணப்போவதில்லை...! இந்தியப் பயணம் பற்றி டிரம்ப் நெகிழ்ச்சி

அது போன்ற மக்கள் திரளை இனி காணப்போவதில்லை...! இந்தியப் பயணம் பற்றி டிரம்ப் நெகிழ்ச்சி

அகமதாபாத் மைதானத்தில் டிரம்ப்

அகமதாபாத் மைதானத்தில் டிரம்ப்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்கள் மத்தியில் உரையாற்றியதை போன்ற நெகிழ்ச்சியான சம்பவம் மீண்டும் வராது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தில் அவர் அகமதாபாத், சமர்பதி ஆசிரமம் மற்றும் தாஜ்மஹால் ஆகியவற்றுக்கு சென்றார்.

குறிப்பாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில், அவர் பொது மக்களிடையே உரையாற்றினார்.

டிரம்ப்

ராஜ்காட்டில் டிரம்ப்

இந்த நிலையில், அமெரிக்காவில் தனது இந்தியப் பயணம் பற்றி பேசியுள்ள அதிபர் டிரம்ப், இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் மோடியை நேசிப்பதாகவும், மோடி சிறந்த நபர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்கள் மத்தியில் உரையாற்றியதை போன்ற நெகிழ்ச்சியான சம்பவம் மீண்டும் வராது என்றும், இந்தியாவிற்கு சென்றுவிட்டு வந்த பிறகு அதுபோன்ற ஒரு மக்கள் திரளை இனி தான் காணப்போவதில்லை என்றும் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

First published:

Tags: Trump India Visit