உக்ரைன் எல்லை அருகே ராணுவ வாகனங்கள், படைகள் ஆகியவற்றை ரஷ்யா குவித்துள்ளதோடு, ராணுவ மருத்துவமனையையும் அமைத்துள்ளது தொடர்பான சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. தற்போது மீண்டும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தை குவித்து வருகிறது. தனது ராணுவத்தின் ஒருபகுதியை முகாம்களுக்கு திரும்ப அழைத்துகொண்டதாக ரஷ்யா கூறினாலும், உக்ரைன் எல்லையில் பல லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக் ஆகிய கிளர்ச்சியாளர்களால் ஆளும் பகுதிகளை சுதந்தரம் பெற்ற பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் அறிவித்தார். உக்ரைனின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்துவரும் Maxar Technologies என்னும் தனியார் நிறுவனம் சில சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஏற்படுத்தியுள்ள கட்டமைப்புகளை இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.
இதையும் படிங்க: ரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டால் இந்தியாவில் எவையெல்லாம் விலை உயரும்?
உக்ரைன் எல்லையை ஒட்டி தெற்கு பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ராணுவ மருத்துவமனையும் கட்டி அமைக்கப்பட்டுள்ளன. சிறிய விமான ஏவுதளமும் அமைக்கப்பட்டுள்ளது. இது உக்ரையினில் இருந்து 40 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மதுபானம் வைத்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மகன் கைது...
டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கனரக உபகரணங்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் கனரக உபகரண டிரான்ஸ்போர்ட்டர்கள் (HETs), உக்ரைனின் எல்லைக்கு கிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதும் சாட்டிலைட் புகைப்படத்தில் காணப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.