Home /News /international /

உச்சக்கட்ட அருவெறுப்பு... விமானத்தில் பெண் பயணி முன்பாக சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்...

உச்சக்கட்ட அருவெறுப்பு... விமானத்தில் பெண் பயணி முன்பாக சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்...

ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் சக பெண் பயணி முன்பு 4 முறை சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் சியாட்டல் நகரிலிருந்து பீனிக்ஸ் நகருக்கு சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆன்டோனியோ ஷெரோட் மெகராட்டி என்ற நபர் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நபர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, தனது பேண்டுகளை கழற்றி, சக பெண் பயணி முன் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். மொத்தம் மூன்று மணி நேர பயணத்தில் இந்நபர் நான்கு முறை இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயணி அந்நபரை புகைப்படம் எடுத்து கேபின் உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் பயணியின் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கப்பட்ட பின், மெக்கர்ட்டி எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் அந்நபர் தனது செயலை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அந்நபர் சக பெண் பயணியிடம் அனுமதி கேட்டுதான் சுய இன்பத்தில் ஈடுபட்டேன். அந்த பெண் முதலில் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை என வாக்குமூலம் தெரிவித்துள்ளார். தான் வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்றே இந்த செயலில் ஈடுபட்டதாகவும், இது அப்பெண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நினைத்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - ரஷ்யா தாக்குதல்: குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க வைக்கும் உக்ரைன் தாய்மார்களின் பதிவுகள்!

இந்த சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட மெக்கர்ட்டி சவுத்வெஸ்ட் ஏர்லைன்சில் பயணம் செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Masturbation, United States of America

அடுத்த செய்தி