Home /News /international /

இந்தியா உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதாரமாக மாற உள்ளது: மாஸ்டர்கார்டு சிஇஓ

இந்தியா உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதாரமாக மாற உள்ளது: மாஸ்டர்கார்டு சிஇஓ

மைக்கேல் மீபேக்

மைக்கேல் மீபேக்

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதாரமாக மாற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மாஸ்டர்கார்டு குளோபல் சிஇஓ மைக்கேல் மீபேக் தெரிவித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    டிஜிட்டல் பொருளாதாரம் என்கிற முறையில் இந்தியாவில் அதற்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதே போன்று, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதாரமாக மாற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மாஸ்டர்கார்டு குளோபல் சிஇஓ மைக்கேல் மீபேக் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவிற்கு தனது முதல் வருகையை மேற்கொண்டிருந்த மீபேக், கட்டண முறைகளின் எதிர்காலம் மற்றும் இந்தியாவில் அவர் பார்க்கும் வாய்ப்புகள் உட்பட பல தலைப்புகள் குறித்து பேசினார்.

    அவரின் உரையில், "இன்று டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இந்தியாவில் அது எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதை தான் நான் பார்த்து வருகிறேன். மேலும் UPI-இன் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் பலவற்றைப் பார்க்கும்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது" என்று தெரிவித்து கொண்டார். அதே போன்று "தொழில்நுட்ப நிறுவனமாகவும், தொழில்நுட்ப அறிஞராகவும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்றும் தெரிவித்து கொண்டார்.

    மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியாவில் தனது நிறுவனத்தின் வளர்ச்சி லட்சியங்களுடன் ஒத்துப்போகும் கட்டண மாதிரிகள் குறித்து தான் விரிவாக உணர்வதாகவும் கூறினார். மேலும், இந்தியாவில் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஃபின்டெக் மற்றும் பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, மாஸ்டர்கார்டு தனது வணிகத்தை மேம்படுத்துவதற்கு வேறு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்து கொண்டார். அதே போன்று, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த 100 மில்லியன் மக்கள் இணைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ALSO READ | அடுத்தடுத்து இறந்த குழந்தை சிசுக்கள்.. விஷ ஊசி செலுத்தியதாக செவிலியர் கைது

    மாஸ்டர்கார்டு வெறும் கிரெடிட் கார்டு நிறுவனமாக இல்லை என்றும், உலகளாவிய கட்டணங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது என்றும் மீபேக் குறிப்பிட்டார். மேலும் இது குறித்து, “நாங்கள் கடன் அட்டை நிறுவனம் அல்ல என்றும், பணம் செலுத்துவதற்கான தேர்வு எதுவாக இருந்தாலும் சரி பணம் செலுத்தும் தொழில்நுட்ப நிறுவனமாக, எங்களின் உத்தியை செயல்படுத்துவோம்" என்று கூறினார்., .”  மேலும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பற்றிய கேள்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார். "சைபர் பாதுகாப்பு பற்றிய கேள்வி தான் இதில் முதல் இடத்தில் உள்ளது என்றும், இது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதால், இது பாதுகாப்பாக இருப்பதை எவ்வாறு உறுதிசெய்ய போகிறார்கள் என்பதையும், அதற்கான செயல்பாடுகளையும் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்து கொண்டார்.

    இவரின் உரையின் மூலம் சில விஷயங்கள் விரிவாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வரும் ஆண்டுகளில் டிஜிட்டல் வணிகம் என்பது பல மடங்கு உயர்ந்து வரும் என்பது தெளிவாகி உள்ளது. ஆனால், அவை பாதுகாப்பானதாக இருக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லும். எதுவாக இருந்தாலும், நுகர்வோராகிய நாம் எது நமக்கு நல்லதோ அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே சிறந்தது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Digital India, India

    அடுத்த செய்தி