போராட்டத்தின் இடையிலும் 70% வாக்குப்பதிவு- அரசுக்கு எதிராய் அமையுமா ஹாங்காங் தேர்தல்?

ஜனநாயக சார்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் தலைமைக்கு எதிராகவுமே இத்தேர்தல் முடிவுகள் இருக்கும் என கூறப்படுகிறது.

போராட்டத்தின் இடையிலும் 70% வாக்குப்பதிவு- அரசுக்கு எதிராய் அமையுமா ஹாங்காங் தேர்தல்?
ஹாங்காங் தேர்தல்
  • News18
  • Last Updated: November 25, 2019, 4:30 PM IST
  • Share this:
ஹாங்காங் நாட்டில் தொடர் போராட்டங்களுக்கு இடையிலும் மாவட்ட கவுன்சில் தேர்தலில் 70 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரசுக்கு எதிரான ஜனநாயக சார்பு போராட்டங்கள் ஹாங்காங் நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஹாங்காங் தலைமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நாட்டில் நேற்று நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் 4.1 மில்லியன் அதாவது 71 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. ஜனநாயக சார்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் தலைமைக்கு எதிராகவுமே இத்தேர்தல் முடிவுகள் இருக்கும் என கூறப்படுகிறது.


இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக சார்பு வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். தேர்தலில் எவ்வித போராட்ட அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் மக்கள் திரளாக வந்து வாக்களித்துள்ளனர். இத்தேர்தல் பீஜிங் கட்டுப்பாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

மேலும் பார்க்க: 6 மாத ஹாங்காங் போராட்டம்... கைதான மிகவும் இளம் போராளி..!
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்