Home » News » International » MASSIVE BLACKOUT IN PAKISTAN AFTER NATIONAL POWER GRID BREAKDOWN MUT

இருளில் மூழ்கிய பாகிஸ்தான்: இயல்பு வாழ்க்கை பாதிப்பினால் மக்கள் அவதி

மக்கள் அனைவரும் மின்சாரம் வரும் வரை அமைதி காக்க வேண்டும். மின்சார பகிர்மானத்தில் பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்று அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கிய பாகிஸ்தான்: இயல்பு வாழ்க்கை பாதிப்பினால் மக்கள் அவதி
பாக். மின்சாரக் கோளாறு. | படம்: ட்விட்டர்.
  • Share this:
பாகிஸ்தானின் மின்பகிர்மான முறையில் மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டின் பல நகரங்கள் நேற்று இரவு முதல் இருளில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. ஞாயிறு காலையிலும் கூட சரியாகவில்லை என்பதால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் நேற்று இரவு பல மணிநேரங்கள் இருளில் மூழ்கின.

இதுகுறித்து இஸ்லாமாபாத் மின்வாரிய துணை ஆணையர் ஹம்ஸா சப்காத் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ தேசிய அளவில் மின்பகிர்மான இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அதனால் பல நகரங்களுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினை சரியாக சில மணிநேரம் ஆகலாம்” எனத் தெரிவித்திருந்தார்.


மின்துறை அமைச்சர் உமர் அயுப் கான் கூறுகையில் “ தேசிய மின்பகிர்மான முறை திடீரென 50 அலைவரிசையிலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டது. இதைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.” என்றார்.

தெற்கு பாகிஸ்தானில் சனி இரவு 11.41 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நாட்டின் பல நகரங்கள் இருளில் மூழ்கின.

இதைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் அனைவரும் மின்சாரம் வரும் வரை அமைதி காக்க வேண்டும். மின்சார பகிர்மானத்தில் பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்று அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
First published: January 10, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading