ஹோம் /நியூஸ் /உலகம் /

மெகா ஷாப்பிங் சென்டரில் பெரும் தீவிபத்து - 7,000 சதுர மீட்டர் சுற்றளவுக்கு பரவிய தீ

மெகா ஷாப்பிங் சென்டரில் பெரும் தீவிபத்து - 7,000 சதுர மீட்டர் சுற்றளவுக்கு பரவிய தீ

ரஷ்ய கடையில் தீவிபத்து

ரஷ்ய கடையில் தீவிபத்து

தீயை கட்டுப்படுத்த 20 தீயணைப்பு வாகனங்களும், 70 தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaMoscowMoscow

ரஷ்யாவில் பெரிய ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் ஒன்றில் திடீரென  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் வடமேற்கு பகுதியில் கிம்கி என்ற நகர் உள்ளது. இங்கு Mega என்ற பெயரில் பெரிய ஷாப்பிங் சென்டர் உள்ளது. இதில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டது.

முதலில் கூரையில் பற்றிய தீயானது பின்னர் மற்ற பகுதிகளில் மளமளவென பரவியது. பின்னர் 7,000 சதுர மீட்டர் சுற்றளவு கொண்ட ஒட்டுமொத்த ஷாப்பிங் சென்டரை சுற்றும் தீ பிடித்தது. இந்த தீயை கட்டுப்படுத்த 20 தீயணைப்பு வாகனங்களும், 70 தீயணைப்பு வீரர்களும் களத்தில் இறங்கினர். கட்டடத்தின் டிசைன் காரணமாக தீயை அணைப்பதில் சிரமம் உள்ளதாக ரஷ்ய அவசர கால அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தீவிபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தின் கோரக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மெகா ஷாப்பிங் சென்டர் ரஷ்யாவின் மிக பெரிய ஷாப்பிங் கடையாகும்.

இதில் IKEA போன்ற கடைகளும் உள்ளன. மேலும், மேற்கு உலக நாடுகளின் ரிடெயல் நிறுவன கடைகள் அனைத்தும் இங்கு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் பின்னணியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் இது தற்செயலாக நேர்ந்த விபத்தா அல்லது போருக்கும் இந்த விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

First published:

Tags: Fire accident, Russia