அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு... மர்மநபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு... மர்மநபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

மெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி சூடு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரில் நேற்று பிற்பகல் மர்மநபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் குவிந்த போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தினர்.

  துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடி வருவதாகவும், அவர் கொல்லப்பட்ட நபர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் இது சொந்தப் பிரச்னை காரணமாக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு என்றும் போலீசார் தெரிவித்தனர். தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

  முதல்கட்ட விசாரணையில், ஸ்டீஃபன் ப்ரொடெரிக் (Stephen Broderic) என்ற நபர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உள்ளதாகவும், அவர் ஒரு முன்னாள் டிராவிஸ் கவுண்டி அதிகாரி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள டெலிவரி நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... அமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: