லெபனான் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போராட்டக்காரர்களைக் கலைத்த பாதுகாப்புப்படை

லெபனான் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போராட்டக்காரர்களைக் கலைத்த பாதுகாப்புப்படை
Demonstrators hold Lebanese flags as they gather during a protest over deteriorating economic situation, in Beirut, Lebanon October 18, 2019. REUTERS
  • News18
  • Last Updated: February 12, 2020, 10:43 AM IST
  • Share this:
லெபனானில் நாடாளுமன்ற கட்டிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.

லெபனான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், அவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மிது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதோடு, அவர்கள் மீது தடியடியும் நடத்தினர்.

இதனிடையே, போராட்டக்காரர்கள் வங்கிக்குத் தீ வைத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை Human Rights Watch உட்பட பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் கண்டித்துள்ளது.


லெபனான் பிரதமர் சஅது ஹரீரியையும் பிற உயர்மட்ட அதிகாரிகளையும் பதவி விலகச் சொல்லும் போராட்டக்காரர்கள், தவறாகக் கையாளப்படும் பொது நிதி குறித்த சுதந்திர விசாரணை வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

Also see:
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading