அமெரிக்காவில் கடந்த சில வருட காலமாகத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கடந்த சனிக்கிழமை சியாட்டில் புறநகர் ரெண்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 1 மணியளவில் ரெண்டன் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதையடுத்து அந்தப் பகுதி காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் செல்லும்போது ஒருவர் இறந்த நிலையிலும் மேலும் பலர் படுகாயம் அடைத்திருந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சியாட்டில் நகரின் தென்கிழக்கில் 16 மைல் தூரத் தொலைவில் அமைத்துள்ள ரெண்டன் பகுதியில் சுமார் 106,000 மக்கள் வசிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு பற்றிய விசாரணையை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பெரிய அளவிலான கூடுகையின் போது வெளியே ஏற்பட்ட தகராற்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி வன்முறை காப்பாகத்தின் தகவலின் படி, இந்த வருடம் அமெரிக்காவில் பெரியளவில் 302 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பிரதமர் ஜோ பைடன் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்தைக் கடத்த மாதம் அங்கீகரித்தார்.
இந்த சட்டம் கடத்த மே மாதம் டெக்சாஸில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, வரையறுக்கப்பட்டது.
Published by:Janvi
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.