பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையா? - ஜெய்ஷ் - இ - முகம்மது அமைப்பு பதில்

இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுவித்ததற்காக மசூத் அசாரின் தம்பி மவுலானா அமர் கண்டணத்தை தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையா? - ஜெய்ஷ் - இ - முகம்மது அமைப்பு பதில்
ஜெய்ஷ் - இ - முகம்மது
  • News18
  • Last Updated: March 3, 2019, 11:01 AM IST
  • Share this:
பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் - இ - முகம்மது அமைப்பின் கட்டடங்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசியது உண்மையே என அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தம்பி மவுலானா அமர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் பிப்ரவரி 25-ம் தேதி இந்திய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அதில் ஜெய்ஷ்- இ - முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும்  அந்த அமைப்பின் கட்டுப்பாட்டு அறை தகர்க்கப்பட்டதாகவும் இந்தியா அறிவித்தது.

ஆனால் அதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், அந்நாட்டு ராணுவமும் மறுத்து வந்தது. அதைத் தொடர்ந்து ஆதாரங்களை வெளியிடும்படி மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.


இந்நிலையில் மசூத் அசாரின் தம்பி மவுலானா அமர் வெளியிட்டுள்ள ஆடியோவில், ‘பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் - இ - முகம்மது அமைப்பின் கட்டடங்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசியது உண்மையே. ஆனால் அவர்கள் எந்த ஓர் அமைப்பின் தலைமையகத்தையும் தாக்கவில்லை, மாறாக காஷ்மீருக்கு உதவுவதற்காக மாணவர்கள் பயின்று வந்த பள்ளியை தாக்கியுள்ளார்கள். அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுவித்ததற்காக எனது கண்டணத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பேசியுள்ளார்.Also watch

First published: March 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading