• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • மக்கள் மாஸ்க் அணிவதால் கொரோனா பரவும் வேகம் மெதுவாகிறது... அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்...

மக்கள் மாஸ்க் அணிவதால் கொரோனா பரவும் வேகம் மெதுவாகிறது... அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்...

மாஸ்க்

மாஸ்க்

கட்டாயம் அணிய வேண்டும் என்ற உலக நாடுகளின் உத்தரவின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை மெதுவாக்கலாம் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.

  • Share this:
ஒரு வருடத்திற்கும் மேலாக உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதன் இரண்டாம் அலை வீசி வருகிறது. உருமாறிய கொரோனாவும் இடையில் நுழைந்தது உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மாஸ்க் கட்டாயம் போட வேண்டும் என்று அரசு கூறினாலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை பார்த்த பின்னும் இன்னும் பலர் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர். இதனிடையே மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உலக நாடுகளின் உத்தரவின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை மெதுவாக்கலாம் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த அமெரிக்காவில் தற்போது பல மாகாணங்கள் கட்டாய மாஸ்க் அணிவது, உணவகங்களில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் உள்ளிட்ட விதிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளன. இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணம் தனது கட்டாய மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதியை தளர்த்தியது. சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கையையும் மீறி கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மாகாணங்களில் இதுவும் ஒன்றானது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த புதிய ஆய்வு முடிவானது உணவகங்களில் சாப்பிட அனுமதிப்பது கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகளை அதிகரிக்கும் என்பதற்கும் வலுவான சான்றுகளை சேர்க்கிறது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், மக்கள் தவறாமல் மாஸ்க் அணியும் சில இடங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், தொற்றால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் உணவகங்களில் உணவருந்தும் அளவிற்கு தளர்வு உள்ள பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும், இறப்பவர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான உயர்வு காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழக நோய் இயக்கவியல் நிபுணரான வில்லியம் ஹனகே கூறுகையில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கையாள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று உணவு விடுதிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே என்றார்.

ஆராய்ச்சியாளர்கள், கட்டாய முகக்கவசம் அமலில் உள்ள மாகாணங்களையும், மக்களை உணவகங்களுக்கு உள்ளே அல்லது வெளியே டேபிள்களிலும் உணவருந்த அனுமதித்த மாகாணங்களையும் தனியே பிரித்து கொண்டனர். இவற்றில் கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையிலான வைரஸ் தோற்று பாதிப்பு தொடர்பான தரவுகளை ஒப்பிட்டு பார்த்தனர்.

ஒப்பீட்டின் முடிவில் கட்டாய முகக்கவசம் அணியும் விதிகள் உள்ள இடங்கள் குறைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடையது என்பதையும், இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடங்கள் புதிய தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் அதிகரித்த தன்மையுடன் தொடர்புடையது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்கென வரம்புகள் இருந்தன. எடுத்துக்காட்டாக, வெகுஜனக் கூட்டங்களுக்கு தடை அல்லது பார்களை மூடுவது போன்ற பிற கொள்கைகளுக்குக் காரணமான கணக்கீடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய முயன்றனர்.

கொரோனா வைரஸ் பற்றிய நமக்கு தெரிந்த எல்லா தகவல்களுடன் இந்த ஆய்வு முடிவை சேர்த்து பார்த்தால், முகக்கவசம் அணிவதன் அவசியமும், உணவகங்களில் கூட்டமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் உணர முடியும் என்று ஆரய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: