Home /News /international /

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் - ஆய்வாளர்களின் நம்பிக்கையை மாற்றிய புதிய ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் - ஆய்வாளர்களின் நம்பிக்கையை மாற்றிய புதிய ஆய்வு

Mars

Mars

Water on Mars: செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆவியாகிவிட்டது என்று பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர்.

செவ்வாய் கிரகத்தில் இருந்த நீரின் வரலாற்றை புரிந்து கொள்வது தற்போதைய செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் மிக முக்கியமான தலைப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நிறைய நீர் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஆனால் அந்த நீர் இப்போது மறைந்து, கிரகம் வறண்டு விட்டது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இன்று எஞ்சியிருக்கும் நீர் அதன் துருவங்களுக்கு அருகில் அல்லது ஆழமான பள்ளத்தாக்குகளில் நீர்க்கட்டி (water ice) வடிவில் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அனைத்து தண்ணீரும் என்ன ஆனது, அந்த கிரகத்தில் கரை புரண்டு ஓடிய தண்ணீருக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள, ஆராய்ச்சியாளர்கள் கிரகத்தின் புவியியல் வரலாற்றை ஒன்றாக இணைக்க முயற்சித்து வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆவியாகிவிட்டது என்று பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். ஆனால் சமீபத்திய புதிய ஆராய்ச்சி ஒன்று இந்த 3 பில்லியன் ஆண்டுகள் என்ற எண்ணிக்கையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. NASA-வின் Mars Reconnaissance Orbiter (MRO)-ன் சமீபத்திய டேட்டா, 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என்று கூறுகிறது. இந்த ஆய்வு முடிவு காரணமாக செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலை நாம் மீண்டும் கட்டமைக்க வேண்டியிருக்கும்.

Also read:  பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லை: தன்னம்பிக்கையுடன் நீச்சல் பழகி ஆற்றைக் கடந்த சிறுவன்

கடந்த 2005-ஆம் ஆண்டு ஏவப்பட்ட நாசாவின் Mars Reconnaissance Orbiter, ஆய்வாளர்கள் நினைத்து கொண்டிருப்பது போல 3 பில்லியன் ஆண்டுகள் இல்லை, 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததை கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவி உள்ளது. நாசா ஆராய்ச்சியாளர்கள் MRO-வின் டேட்டாக்களை பயன்படுத்தி நீர் ஆவியான பின் எஞ்சியிருக்கும் உப்பு படிவுகளை (salt deposits) பார்த்தனர். முந்தைய ஆய்வுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆவியாகி விட்டதாக கூறி இருந்த நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு அந்த காலவரிசையை கணிசமாக குறைத்துள்ளது ஆய்வாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய ஆய்வு முடிவு சமீபத்தில் AGU Advances-ல் வெளியிடப்பட்டன. மேலே கூறியபடி பனி நீர் ஆவியாகி விடப்பட்ட குளோரைடு உப்பு படிவுகளை ஆய்வு செய்து நாசா குழு இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டு இருக்கிறது. தவிர செவ்வாய் கிரகத்தில் நீர் திரவ வடிவில் இருப்பதற்கான முதல் கனிம ஆதாரத்தை சால்ட் டெபாசிட்கள் வழங்குகின்றன. MRO-வின் டேட்டாவை பயன்படுத்தி நீர் ஆவியாகிய பிறகு எஞ்சியிருக்கும் உப்பு படிவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், சிறுகோள் தாக்கங்கள் பள்ளங்களை பாதித்த பகுதிகளில் இந்த உப்பு படிவுகளை தேடினார்கள். MRO விண்கலத்தில் செவ்வாய் கிரகத்திற்கான காம்பாக்ட் ரீகனைசன்ஸ் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (CRISM) என்ற கருவியில் இருந்து டேட்டாவை ஆய்வு குழு பயன்படுத்தியது.

Also read:  தாலிபான்களை எதிர்த்த நியூசி பெண் ஊடகவியலாளர்.. தாலிபான்களிடமே தஞ்சம்!!

செவ்வாய் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் இருக்கும் குளோரைடு உப்புகளின் அளவை வரைபடமாக்க அவர்கள் விண்கலத்தில் உள்ள Context Camera மற்றும் ஹை-ரெசல்யூஷன் இமேஜிங் சயின்ஸ் எக்ஸ்பிரிமென்ட்(HiRISE) கலர் கேமராவையும் பயன்படுத்தினர். பள்ளங்களின் எண்ணிக்கை மற்றும் உப்பு படிவுகளின் அளவு பற்றிய தகவல்களை இணைத்து நீர் ஆவியான காலத்தை மதிப்பிட்டனர். நமது கருவிகள் மூலம் கிரகத்தை எவ்வளவு அதிகமாக மேப் செய்கிறோமோ அவ்வளவு சிறப்பாக அதன் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும் என்று நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக பணியின் துணை திட்ட விஞ்ஞானி லெஸ்லி தம்பாரி கூறி இருக்கிறார்.
Published by:Arun
First published:

Tags: MARS, NASA, Research

அடுத்த செய்தி