கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் திருமணம் செய்துகொண்ட தம்பதி
இருவரும் ஆக்ஸிஜன் கருவியை அணிந்தபடி கைகளை பிடித்து அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து தம்பதி
- News18 Tamil
- Last Updated: January 22, 2021, 6:43 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பு பலரது வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த கொரோனா ஊரடங்கில் அதிகளவில் திருமணங்கள் நடந்தது நெட்டிசன்களின் மீம்களுக்கு கன்டென்டாக அமைந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்கு ஆளான இங்கிலாந்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த திருமணம் நடைபெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இருவரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளானதோடு மிகவும் ஆபத்தான நிலையில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரும் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைமன் ஓ பிரையனின் நிலைமை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், எந்த பிரச்னையும் அவர்களின் திருமணத்தை தடுக்க முடியவில்லை.
ஜூன் மாதத்தில் தங்களுக்கு திருமணம் நடைபெற இருந்ததாக எலிசபெத் மருத்துவர் ஒருவரிடன் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலைமை மோசமடைந்து வந்ததால் மருத்துவமனையில் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்டுள்ளனர். இது ஒன்று மட்டுமே அவர்களுக்கான வாய்ப்பாக இருந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் எங்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதற்கான உரிமத்தைப் பெற விரைந்து செயல்பட்ட போது சைமனின் நிலைமை மிகவும் மோசமானதாகவும் சைமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதாகவும் கண்ணீருடன் கூறி எலிசபெத் நினைவு கூர்ந்தார். எலிசபெத் தொடர்ந்து பேசும்போது, ``மருத்துவர்கள் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று என்னிடம் கூறினார்கள். ஏனெனில், சைமன் சிகிச்சைக்காக அவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், அவர்கள் சிகிச்சையை ஒருமணிநேரம் நிறுத்தி வைத்தனர். நாங்கள் அந்த தருணத்தில் இணைந்து திருமணம் செய்துகொண்டோம். எங்களின் முதல் முத்தத்திற்கு நாங்கள் சில நாள்கள் காத்திருக்க வேண்டியது இருந்தது.” என்று தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இறப்பு விகிதம் 80 சதவிகிதம் ஆக இருப்பதால் மகிழ்ச்சியான முடிவு இது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஆக்ஸிஜன் கருவியை அணிந்தபடி கைகளை பிடித்து அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.`` ஒவ்வொரு முறையும் மூச்சு விடுவதற்கு சிரமப்படும் திகிலூட்டும் அனுபவம், நாம் விரும்பும் மனிதர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. நாங்கள் ஒருவருக்கொருவர் இல்லாமல் இருந்திருந்தால், திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், நாங்கள் இப்போது இங்கே இருந்திருப்போம் என்று நான் நினைக்கவில்லை” என எலிசபெத் கூறியுள்லார்.
சைமன் மற்றும் எலிசபெத் தம்பதிகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். எனினும், ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கெனான் ஒரு சாட்சியாக நின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். ``குழுவுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி முடித்தோம். அவர்கள் ஆரம்பத்தில் விரும்பிய திருமணத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால், அவர்களுக்கு மறக்க முடியாத குறிப்பிடத்தக்க திருமணத்தை நடத்தியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த திருமணம் நடைபெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இருவரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளானதோடு மிகவும் ஆபத்தான நிலையில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரும் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைமன் ஓ பிரையனின் நிலைமை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், எந்த பிரச்னையும் அவர்களின் திருமணத்தை தடுக்க முடியவில்லை.
ஜூன் மாதத்தில் தங்களுக்கு திருமணம் நடைபெற இருந்ததாக எலிசபெத் மருத்துவர் ஒருவரிடன் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலைமை மோசமடைந்து வந்ததால் மருத்துவமனையில் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்டுள்ளனர். இது ஒன்று மட்டுமே அவர்களுக்கான வாய்ப்பாக இருந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் எங்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதற்கான உரிமத்தைப் பெற விரைந்து செயல்பட்ட போது சைமனின் நிலைமை மிகவும் மோசமானதாகவும் சைமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதாகவும் கண்ணீருடன் கூறி எலிசபெத் நினைவு கூர்ந்தார்.