ஹோம் /நியூஸ் /உலகம் /

மூன்றாவது குழந்தை.. ஸ்வீட் செய்தியுடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க்!

மூன்றாவது குழந்தை.. ஸ்வீட் செய்தியுடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க்!

மனைவி பிரிசில்லாவுடன் மார்க் சக்கர்பெர்க் புத்தாண்டு வாழ்த்து

மனைவி பிரிசில்லாவுடன் மார்க் சக்கர்பெர்க் புத்தாண்டு வாழ்த்து

தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் மார்க் சக்கர்பெர்க் 2023 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaCaliforniaCalifornia

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் மார்க் சாக்கர்பெர்க்.உலகின் மெகப் பெரிய பன்னாட்டு நிறுவனமான Meta நிறுவனத் தலைவராகவும் சிஇஓவாக இவர் உள்ளார். பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்பே மெட்டா நிறுவனம். இப்படி, உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களின் பாஸ்ஸாக இருக்கும் மார்க் சக்கர்பெர்க், பிரிசில்லா சான் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினர். பின்னர், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், 2012ம் ஆண்டில் மார்க்கும் பிரிசில்லாவும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

2015ஆம் ஆண்டில் முதல் பெண் குழந்தை மேக்சிமா சான் சக்கர்பெர்க் பிறந்தார். 2017ஆம் ஆண்டில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு ஆகஸ்ட் என பெயர் வைத்தனர். இந்நிலையில், 6 ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவுள்ளது.

பிரிசில்லா கர்ப்பமாக உள்ள நிலையில், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் மார்க் சக்கர்பெர்க் 2023 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த படத்தில் மார்க் தனது மனைவி பிரிசில்லா வயிற்றில் கைவைத்து போஸ் கொடுத்துள்ளார். புத்தாண்டு வாழ்த்துகள். 2023ஆம் ஆண்டில் சாகசங்களும் அன்பும் வரப்போகிறது என்று தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை பற்றி ஆவலுடன் தெரிவித்துள்ளார் மார்க்.

First published:

Tags: Facebook, Mark zuckerberg