88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ள மார்பர்க் வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய, கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா, கொரோனா போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘மார்பர்க் வைரஸ்’ 24 முதல் 88 சதவிகிதம் வரையில் இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது எனவும், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, தெற்கு குக்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸ் நோய் காரணமாக இறந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுடிருப்பதாகவும் உலக சுகாதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Must Read : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மோசம், கவலையளிக்கிறது: 3-வது அலையை கணித்த விஞ்ஞானி கவலை
கினியாவில் எபோலா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாக சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், புதிய ‘மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்திருப்பது இருப்பது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலால் உறவுகளையும், பொருளாதாரத்தையும் இழந்து, சொல்லொனா துயரத்திலும், பாதிப்பிலும் சிக்கித் தவித்து, தற்போது அந்த பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நிலையில், புதிய வகை வைரஸ் பற்றிய தகவல் அதிர்ச்சியையும், கவலையையும் அளிப்பதாக சொல்லப்படுகிறது.
எனினும், மனிதர்கள் இது போன்ற பல்வேறு நோய் கிருமிகளை வென்று முன்னேறி வந்துள்ளனர் என்பதை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.