Home /News /international /

துபாயில் காணாமல் போன கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் அரிதான கைக்கடிகாரம் அசாமில் மீட்பு!

துபாயில் காணாமல் போன கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் அரிதான கைக்கடிகாரம் அசாமில் மீட்பு!

துபாயில் காணாமல் போன கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் அரிதான (LIMITED EDITION) கைக்கடிகாரம் அசாமில் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மரடோனாவின் முன்னாள் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான டீகோ மரடோனாவை கவுரவப்படுத்தும் விதமாக, 2010-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது, குறைந்த அளவில் கைக் கடிகாரம் ஒன்றை ஹுப்லாட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. மரடோனாவின் புகைப்படம், ஜெர்சி எண், கையொப்பம் பொறிக்கப்பட்ட 250 கடிகாரங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

    சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த கடிகாரத்தை உலகக்கோப்பைத் தொடரின்போது மரடோனாவும் அணிந்திருந்தார். மரடோனாவின் மறைவிற்குப் பின்னர், துபாயில் உள்ள வீட்டில் இந்த கடிகாரம் உள்ளிட்ட அவரது பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அண்மையில் ஹுப்லெட் கடிகாரம், காணாமல் போனது தெரியவந்ததால் துபாய் போலீசில் புகாரளிக்கப்பட்டது.

    இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வீட்டில் பாதுகாவலராக இருந்த அசாமைச் சேர்ந்த வாசித் ஹுசைன் என்பவர், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா திரும்பியது தெரியவந்தது. அதன்பிறகு அவர் துபாய்க்கு திரும்பவில்லை என்றும், தொலைபேசியில் அழைத்தாலும் எந்தப் பதிலும் இல்லை என்றும் சக பணியாளர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அசாம் போலீசாருக்கு துபாய் போலீசார் தகவல் அளித்தனர். இதனையடுத்து, அசாம் மாநிலம் ஷிவசங்கர் மாவட்டத்தில் உள்ள வாசித் ஹுசைன் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லாத நிலையில், உறவினர் இல்லத்தில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் வாசித் ஹுசைனை கைது செய்தனர்.

    அத்துடன் அவரிடம் இருந்த மரடோனாவின் கடிகாரமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடிகாரத்தை துபாயில் இருந்து இந்தியாவிற்கு வாசித் ஹுசைன் எப்படி கொண்டு வந்தார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அசாமில் இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில் துபாய் போலீசில் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வாசித் ஹுசைனின் கைதை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா மற்றும் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.

    Also read: அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட ஆறு மாகாணங்களை தாக்கிய சூறாவளி.. துயரத்தில் அமெரிக்க மக்கள்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Assam

    அடுத்த செய்தி