போதைக்கு அடிமையாவது போல சாஃப்ட் ட்ரிங்குகளுக்கு அடிமையாகும் மக்கள்: அதிர வைக்கும் தகவல்

போதைக்கு அடிமையாவது போல சாஃப்ட் ட்ரிங்குகளுக்கு அடிமையாகும் மக்கள்: அதிர வைக்கும் தகவல்

ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குளிர்பானம் குடிக்கும் நபர்கள் தீய எண்ணங்களுக்கு உட்பட்டவராக இருப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் சர்வேயும் வெளியாகியுள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குளிர்பானம் குடிக்கும் நபர்கள் தீய எண்ணங்களுக்கு உட்பட்டவராக இருப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் சர்வேயும் வெளியாகியுள்ளது.

  • Share this:
இன்றைய காலத்தில் நம் வாழ்வோடு குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன எனலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை. ஒருமுறை சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். ஆனால், இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல்கள், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்இந்த குளிர்பானங்களில் இருக்கும் ஒரு வகை போதை பொருள் அதை மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் உணர்வை உங்களில் ஏற்படுத்துகிறது என்கிறார்கள். இதுவே குளிர்பானங்களுக்கு நீங்கள் அடிமையாவதற்கு காரணம். மேலை நாடுகளில் டயட் கோக், கோகோ கோலா, ரெட் புல் போன்ற கேன்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் தான் அதிக அளவில் மக்களால் விரும்பப்படுகிறது

சாஃப்ட் ட்ரிங்குகளை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

டயட் கோக் போன்ற சாஃப்ட் ட்ரிங்குகளில் உள்ள ஹை பிரக்டோஸ்கார்ன் எனும் பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். நம் உடலில் தேவைக்கு அதிகமான கலோரி சேரும், பின் அது கொழுப்பாக மாறி உடலிலே தங்கி, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இவற்றில் உள்ள காபின், பானத்தை குடித்ததும் அதிக சக்தி கிடைப்பது போன்ற நிலையை உருவாக்கி, தொடர்ந்து அதனை குடிக்கும் அளவுக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்திவிடும். குளிர்பானத்தை குடிப்பதால், சிறுநீரக கற்கள், வயிற்று உப்புசம், வாயுத்தொந்தரவு, பசியின்மை, வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றும். குளிர்பானங்களில் உள்ள அதிகளவு இனிப்புகள் பற்களை சேதமாக்கி, எலும்புகளில் உள்ள கால்சியத்தை பாதித்து, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற நோய்களை ஏற்படுத்தும்

ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குளிர்பானம் குடிக்கும் நபர்கள் தீய எண்ணங்களுக்கு உட்பட்டவராக இருப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் சர்வேயும் வெளியாகியுள்ளது. அவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடிய தூண்டுதல்களை மூளையில் பெற்றிருப்பார்கள். மிகவும் ஆக்ரோஷமாகவும் இவர்கள் மாறிவிடுகிறார்கள். அதிகம் கோபப்படும் நபராகவும் இருக்கிறார்கள். இருப்பினும், இதன் விளைவுகளை கண்டுகொள்ளாமல் இந்தியா உட்பட பல நாடுகளில் மக்களின் மிகவும் விரும்பப்படும் பானமாக இந்த சாஃப்ட் ட்ரிங்குகள் அமைந்துள்ளன. ஒரு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் இதுபோன்ற வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இப்பொது அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

வெளிநாட்டவர்கள் பலர் இந்த சாஃப்ட் ட்ரிக்குகளுக்கு அடிமையாகியுள்ளனர். இதனால், நினைக்கும் போதெல்லாம் அதனை குடிக்க விரும்புவதாக பலர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த சாப்ட் ட்ரிங்குகளுக்கு எந்தளவுக்கு அடிமையாகியுள்ளனர் என்பதையும், அவர்கள் சந்தித்த விளைவுகள் மற்றும் அதிலிருந்த எப்படி மீண்டார்கள் என்ற விவரத்தை பகிர்ந்துள்ளனர்

* இங்கிலாந்தின் மான்ஸ்ஃபீல்ட் பகுதியை சேந்த ஒரு நபர், "20 வயதிற்கு முன்பிலிருந்தே நான் ரெட் புல் குடித்து வருகிறேன். என்னால் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு கேன்கள் ரெட் புல் குடிக்க முடியும். நான் 30 வயதில் கர்ப்பமாக இருந்தபோது, ​​அதனை குடிப்பதை நிறுத்தினேன். ஆனால் என் மகள் பிறந்தபோது அவள் ஒருபோதும் தூங்கவிடவில்லை. அதனால் நான் அதை மீண்டும் குடிக்க ஆரம்பித்தேன். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ரெட் புல் குடிப்பதை மீண்டும் நிறுத்த முடிவு செய்தேன். ஆனால் முடியவில்லை. அதற்கு பதிலாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று பாட்டில்கள் லூகோசேட் குடித்தேன். எனக்கு படபடப்பு ஏற்பட ஆரம்பித்ததும், கோகோ கோலாவுக்கு மாற முடிவு செய்தேன். இப்போது என் மகளுக்கு ஏழு வயது, நான் ஒரு நாளைக்கு ஒரு கேன் டயட் கோக் குடிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

* லண்டனை சேர்த்த கோகோ கோலா தொழிற்சாலை தொழிலாளி ஒருவர், ”காலை 6 மணி ஷிப்டின் தொடக்கத்தில் டயட் கோக் குடிப்பது என் இயல்பு. கோகோ கோலா தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும்பாலான கோக் பிராண்டுகள் இலவசமாகக் கிடைக்கும். இதனால் ஒரு நாளுக்கு ஐந்து அல்லது ஆறு 500 மில்லி பாட்டில்கள் டயட் கோக் குடிப்பேன். அதனால் பல விளைவுகளை சந்தித்ததால் டயட் கோக்கில் தண்ணீர் கலந்து குடிக்க ஆரம்பித்தேன்.ஆனால் முடியவில்லை. பிறகு லாக்டவுன் ஆரம்பித்ததால் என்னால் அதிக அளவு கோக் வாங்க முடியவில்லை. எனவே படிப்படியாக குறைத்து ஒரு வாரத்திற்கு 2 லிட்டர் கோக் குடிப்பதை பழக்கமாகியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

* இதேபோல டண்டீ எனும் பகுதியை சேர்ந்த பாரி என்பவர் தினமும் ஒரு மைல் தூரம் நடந்து சென்று பெப்சி வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு குழந்தை பருவத்தில் இருந்தே கோக், பெப்சி போன்ற பானங்களை குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 12 வயதிற்குள் அவர் ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டர் கோக் குடித்து வந்திருக்கிறார். 14 வயதில், சர்க்கரையால் ஏற்பட்ட பல் சிதைவு காரணமாக பெப்சி மேக்ஸ் பானத்திற்கு மாறியுள்ளாராம். இது குறித்து அவர், "எனது 16 வயதில், நான் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் பெப்சி மேக்ஸைக் குடித்துக்கொண்டிருந்தேன். மெதுவாக பல் அரிப்பு ஏற்பட்டது. மொத்தத்தில், இதுவரை எனக்கு 14 பற்கள் சிதைத்துள்ளன. இருப்பினும் குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்த முடியவில்லை. 20 வயதிலிருந்து, நான் ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஆறு லிட்டர் குடித்துக்கொண்டிருந்தேன். பின்னர் வீக்கம், எலும்பு இழப்பு போன்ற பல பிரச்சனைகளை சந்தித்தேன். இதனால் தற்போது பெப்சி மேக்ஸ் பானம் குடிப்பதை நிறுத்திவிட்டேன் என கூறியுள்ளார்.

இவரை போல இன்னும் பலர் இதுபோன்ற சாஃப்ட் ட்ரிங்குகளுக்கு அடிமையாகி உள்ளனர். இந்தியாவில் கூட, ஸ்ப்ரைட், 7அப், கோக், ஃபாண்டா போன்ற சாஃப்ட் ட்ரிக்குகளுக்கு அடிமையாகியுள்ளனர். அதிகரித்த பழக்கம் நாளடைவில் உயிரிழக்கும் அபாயத்தை ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதை மறவாமல், அளவோடு குளிர்பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: