Home /News /international /

Work From Home மூலமாக 6 நிறுவனங்களில் முழு நேர ஊழியராக பணியாற்றும் இளைஞர் - விரைவில் கோடீஸ்வரன் ஆவேன் என்கிறார்.. எப்படி சாத்தியம்?

Work From Home மூலமாக 6 நிறுவனங்களில் முழு நேர ஊழியராக பணியாற்றும் இளைஞர் - விரைவில் கோடீஸ்வரன் ஆவேன் என்கிறார்.. எப்படி சாத்தியம்?

Work From Home

Work From Home

Work From Home: இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் அவர் பார்க்கும் வேலை எதுவும் பார்ட் டைம் ஜாப் அல்லது குறிப்பிட்ட திட்டங்களை முடித்துக் கொடுக்கும் பணிகள் அல்ல.

கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்களின் பணிச்சூழல் மாறியுள்ளது. வெளியுலகம் பாதுகாப்பற்றது என்று கருதப்படும் நிலையில், பெரும்பாலான பணியாளர்கள் Work From Home திட்டத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருகின்றனர்.

ஆனால், அலுவலகத்தில் பணிபுரிவது போன்ற சௌகரியம் வீட்டில் இல்லை என்ற புகார் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, வீட்டில் இருந்து பணிபுரிவதால் நீண்ட நேரம் பணி செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறோம் என்றும், வொர்க் பிரஷர் அதிகமாக இருக்கிறது என்றும் பணியாளர்கள் பலர் கூறி வருகின்றனர். இதனால் கவலை, திடீர் மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

என்னதான் வீட்டில் இருந்தே பணி செய்வது என்றாலும், ஒரு சமயத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதே நமக்கு கடினமாக உள்ள போதிலும், ஒரே சமயத்தில் 6 இடங்களில் பணிபுரியும் நபர் குறித்த செய்தி நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், அந்த செய்தி வைரலாகி வருகிறது.

Also read:  60% தள்ளுபடி விலையில் Amazon Prime சந்தா: எப்படி பெறுவது?

ஆம், உண்மைதான். வொர்க் பிரம் ஹோம் திட்டத்தின் மூலமாக ஆறு நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக கூறும் நபர் ஒருவர், வெகுவிரைவில் தான் கோடீஸ்வரனாக இருப்பதாக கூறுகிறார். ‘ரெட்டிட்’ என்ற இணையதளத்தில் தனது பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களை இந்த நபர் வெளியிட்டிருக்கிறார். தான் ஐடி தொழில் துறையில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா சூழல் காரணமாக தற்போது மேலும் பல வேலைகளை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் அவர் பார்க்கும் வேலை எதுவும் பார்ட் டைம் ஜாப் அல்லது குறிப்பிட்ட திட்டங்களை முடித்துக் கொடுக்கும் பணிகள் அல்ல. ஆறு இடங்களிலும் முழுநேரமாக பணி செய்வதாக அவர் கூறியுள்ளார். ஐரோப்பாவை சேர்ந்த அவர் 2022ஆம் ஆண்டில் தான் ரூ 5.27 கோடி சம்பாதிக்க இருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய பிற்கால வாழ்க்கைக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே சம்பாதிக்க இருப்பதால் 40 வயதாகும்போது தான் ஓய்வுபெற திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Also read: தபால் அலுவலகத்தில் டைம் டெபாசிட் கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?

ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் அளவுக்கு திறனும், கடுமையான உழைப்பும் இருப்பது குறித்து பலர் பாராட்டுகின்ற போதிலும், அவரது நேர்மை குறித்து நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் பணியாற்றுவது சட்ட ரீதியாக நியாயமானதா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேசமயம், ”எனக்கெல்லாம் ஒரு வேலைவாய்ப்பு கிடைப்பதே மிகுந்த சிரமமாக இருக்கிறது, உங்களுக்கு 6 வேலைவாய்ப்புகளா? அப்படியானால் எனக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்கள்’’ என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Work From Home

அடுத்த செய்தி