புறாவுக்கு அக்கப்போரா? ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட்டை ஏற்காத முதலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

புறாவுக்கு அக்கப்போரா? ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட்டை ஏற்காத முதலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

ஃபேஸ்புக்

பெரும்பாலும் பலரின் ரெக்குவஸ்ட்டுகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான சமூக ஊடக பயனர்களால் (social media users) நிராகரிக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன.

  • Share this:
சோசியல் மீடியாக்கள் உண்மையில் மனிதர்களை இணைப்பதற்கும், நன்மை செய்வதற்காகவும் அவர்களின் எண்ண ஓட்டங்கள், அவர்களுக்கு பிடித்தவை பிடிக்காதவை, அவர்களது திறமைகள் உட்பட பலவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக தான் இருக்கவேண்டும். ஆனால் பின்வரும் சம்பவம் பலரையும் விழிபிதுங்க வைத்துள்ளது. 

ஃபேஸ்புக் பிரண்ட் ரெக்குவஸ்ட்டை (Facebook friend request) ஏற்காததற்காக ஒரு நபர் தனது முன்னாள் முதலாளியின் வீட்டின் கதவை உதைத்து அச்சுறுத்தியுள்ளார். உங்களுக்கு சோசியல் மீடியா இன்விடேசன் மற்றும் பிரண்ட் ரெக்குவஸ்ட்டுகள் (social media invitations and friend requests) எவ்வளவு முக்கியம்? ஒரு நண்பரோ, குடும்ப உறுப்பினரோ அல்லது அறிமுகமானவர் என யாராக இருந்தாலும் ஃபேஸ்புக் அல்லது பிற தளங்களில் உங்கள் ரெக்குவஸ்ட்டை ஏற்கவில்லை என்றால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? 

பெரும்பாலும் பலரின் ரெக்குவஸ்ட்டுகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான சமூக ஊடக பயனர்களால் (social media users) நிராகரிக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. பேஸ்புக்கில், இது பல பயனர்களின் வழக்கமான செயலாகும். இருப்பினும், இன்விடேசன்  மற்றும் ரிக்குவஸ்ட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் சிலர் உள்ளனர். 

மேலும் படிக்க : சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ள WhatsApp - இதை செய்யாவிடில் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படும்!

வடக்கு டகோட்டாவைச் (North Dakota) சேர்ந்த ஒரு நபர் இந்த விஷயத்தை வேற லெவலில் கையாண்டுள்ளார், அந்த நபரின் முன்னாள் முதலாளிக்கான பேஸ்புக் பிரண்ட் ரிக்குவஸ்ட்தான் (Facebook friend request) இன்று ட்ரெண்ட். வெறும் பிரண்ட் ரிக்குவஸ்ட் சம்பவம் இன்று பேசுபொருளாகியுள்ளது மட்டுமல்லாமல் இது உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

தனது ஃபேஸ்புக் பிரண்ட் ரிக்குவஸ்ட்டை ஏற்காததற்காக தனது முன்னாள் முதலாளியை கொலை செய்யபோவதாக மிரட்டிய அந்த நபர் இப்போது ஜெயிலில் கம்பி எண்ணுகிறார். நமக்கு கிடைத்த தகவல்களின்படி, 29 வயதான காலேப் புர்சிக் (Caleb Burczyk) பேஸ்புக் ரெக்குவஸ்ட்டை (Facebook request) அனுப்பிய இரண்டு நாட்களுக்கு பிறகு தனது முன்னாள் முதலாளியின் வீட்டிற்கு சென்று அவர் வீட்டின் முன் கதவை உதைத்து அட்டகாசம் செய்துள்ளார். 

டிசம்பர் 29 அன்று நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை தொடர்ந்து, பர்சிக் (Burczyk ) என்ற நபர் கொலை குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று (Christmas eve) பர்சிக் (Burczyk ) தனது முன்னாள் முதலாளிக்கு இவர் ஒரு பிரண்ட் ரிக்குவஸ்ட்டை அனுப்பியிருந்தார். அவரது ரெக்குவஸ்ட் இரண்டு நாட்களுக்கு மேலாக பதிலளிக்கப்படவில்லை என்பதை உணர்ந்த அந்த நபர், தனது முன்னாள் முதலாளிக்கு அச்சுறுத்தல்களை அனுப்பத் தொடங்கினார்.

"எனது பிரண்ட் ரெக்குவஸ்ட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நான் உங்களைக் கொன்று விடுவேன்" என்று அவர் தனது முன்னாள் முதலாளிக்கு மெசேஜ் அனுப்பினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, பர்சிக் மீண்டும் தனது முன்னாள் முதலாளிக்கு வேறொரு சமூக ஊடக கணக்குகளில் இருந்து செய்தி அனுப்பினார், ரெக்குவஸ்ட் ஏற்கப்படாவிட்டால் சிக்கல் ஏற்படும் என்று கூறினார். அதிகாரிகளின் கூற்றுப்படி, பர்சிக் தன்னைப் பற்றிய ஒரு போட்டோவை போஸ்ட் செய்துள்ளார், மேலும் அவரது முன்னாள் முதலாளி வீட்டிற்கு ஒரு புதிய கதவு தேவைப்படும் என்று அதில் எழுதியிருந்தார். 

பின்னர், டிசம்பர் 26ம் தேதிக்கான சி.சி.டி.வி காட்சிகளை (CCTV footage) ஆய்வு செய்தபோது பர்சிக் உண்மையில் தனது முன்னாள் முதலாளியின் வீட்டின் கதவை உதைப்பது நிரூபணமாகியுள்ளது. திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது இயல்பானதுதான், ஆனால் உண்மையில் இந்த சம்பவம் இப்போது நிகழ்ந்து உள்ளது. மேலும் இது காண்போரை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. இந்த செயலுக்கு பின்னர் ஏதேனும் பர்சனல் பழிவாங்கல்கள் இருக்கின்றதா அல்லது சோசியல் மீடியாக்களுக்கு ஒரு நபர் அடிமையானதால் ஏற்பட்டதன் விளைவா என்று பலரும் தங்களது உள்ளக் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

 
Published by:Gunavathy
First published: