• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ‘மணி லாண்டரிங்’ இதுதானா? - வாஷிங் மெசினில் பதுக்கப்பட்ட ₹2.80 கோடி

‘மணி லாண்டரிங்’ இதுதானா? - வாஷிங் மெசினில் பதுக்கப்பட்ட ₹2.80 கோடி

வாஷிங் மெசினில் கைப்பற்றப்பட்ட பணம்

வாஷிங் மெசினில் கைப்பற்றப்பட்ட பணம்

அந்நியச் செலாவணி முறைகேடு, பணமோசடி ஆகிய விவகாரங்கள் ஆங்கிலத்தில் ‘மணி லாண்டரிங்’ (Money Laundering) என்று அறியப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பணமோசடி புகாரில் சோதனை நடத்திய போலீசார், வாஷிங் மெசினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2.80 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டெர்டாம் நகரில் இருக்கும் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அந்நியச் செலாவணி முறைகேடு, பணமோசடி ஆகிய விவகாரங்கள் ஆங்கிலத்தில் ‘மணி லாண்டரிங்’ (Money Laundering) என்று அறியப்படுகிறது. இந்நிலையில், இந்த புகாரின் பெயரில் நடந்த சோதனையில் போலீசார் அதிர்ந்து போயினர்.

20 மற்றும் 50 யூரோ நோட்டுக் கட்டுகளாக இந்திய மதிப்பில் ரூ.2.80 கோடி ரூபாய் வாஷிங் மெசினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அடையாளம் தெரியாத 24 வயது நபரை தேடி வருகின்றனர்.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: