ஒரு பெரிய பபுள் ஒன்றினுள் 700-க்கும் மேற்பட்ட சிறிய பபுள்ஸ்களை வைத்து உலக சாதனை..

ஒரு பெரிய பபுள் ஒன்றினுள் 700-க்கும் மேற்பட்ட சிறிய பபுள்ஸ்களை வைத்து உலக சாதனை..

படம்: பேஸ்புக்

ஜனவரி 4, 2021ல் பகிரப்பட்ட  இந்த வீடியோ, பேஸ்புக்கில் 6, 25000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது, 7500க்கும் மேற்பட்ட ரியாக்சன்களையும் பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒவ்வொரு அசத்தலான பணிக்கும் உலக சாதனையில் (world record) இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில், வித்தியாசமான செயலால் ஒருவர் கின்னஸ் உலக சாதனையில் (Guinness World Records) இடம்பிடித்துளார். அவர் செய்த சாதனை என்ன தெரியுமா? ஒரு பெரிய பபுள் ஒன்றினுள் 700க்கும் மேற்பட்ட சிறிய பபுள்ஸ்களை ஊதி ஒன்றிணைத்ததற்காக அவருக்கு இந்த பாராட்டு கிடைத்துள்ளது. சாங் யூ-தே (Chang Yu-Te) என்ற நபர் ஒரு பெரிய பபுளின் உள்ளே சிறிய பபுள்ஸ்களை ஊதி ஒன்றிணைத்ததை காட்டும் அட்டகாசமான வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. 

4 நிமிட வீடியோ கிளிப்பில், "பல ... பபுள்ஸ்கள், என்று வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது, அதில் 'பெரும்பாலான சோப் பபுள்ஸ்கள் ஒரு பெரிய பபுள் ஒன்றிற்குள் அடக்கிவைக்கப்பட்டுள்ளன." இந்த ரெகார்டை படைத்த சாங் யூ-தே (Chang Yu-Te) மொத்தம் 783  பபுள்ஸ்களை ஊதி சாதனை படைத்துள்ளார். வீடியோவின் முதல் 2 நிமிடங்கள் ஒரு பெரிய சோப் பபுள்ஸ்களை ஒரு பெரிய பபுள் ஒன்றிற்குள் அடக்குவதற்கான முதல் சாதனையை காட்டுகிறது,  அடுத்த 2 நிமிடங்கள் அவரது மற்றொரு உலக சாதனையை கொண்டுள்ளது. 'ஒரு சோப் பபுளுக்குள் அதிக துள்ளல்' (most bounces of a soap bubble) என்ற சாதனையையும் சாங் யூ-தே (Chang Yu-Te) நிகழ்த்தியுள்ளார். அந்த சோப் பபுளை அவர் கையால் 290 முறைகள் துள்ள செய்தும், தனது கையில் பபுளை கவனமாகக் குவித்தும், அதை நேர்த்தியாக துள்ளிக் குதிக்க வைத்துள்ளார். 

சாங் யூ-தேவின் (Chang Yu-Te) மனதை மயக்கும் சாதனை வீடியோவை இங்கே பாருங்கள்:-ஜனவரி 4, 2021ல் பகிரப்பட்ட  இந்த வீடியோ, பேஸ்புக்கில் 6, 25000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது, 7500க்கும் மேற்பட்ட ரியாக்சன்களையும் பெற்றுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர், மேலும் இது 700 க்கும் மேற்பட்ட முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. யூ-டெவின் திறமை குறித்து நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளுவது மட்டுமல்லாமல் நெட்டிசன்களின் கருத்தையும்  வெளிப்படுத்தியுள்ளனர். 

பெரும்பாலான மக்கள் யூ-டெவின் திறமையைப் பாராட்டி, அவரின் சாதனையை ‘amazing’ மற்றும் ‘mind blowing.'  என்றும் குறிப்பிட்டுள்ளனர். கமெண்ட் செக்க்ஷனில் பயனர்களில் ஒருவர், யூ-டெ எந்த வகையான சோப்பைப் பயன்படுத்தினார் என்று நான் யோசிக்கிறேன், ஏனெனில் அதில் ஒரு பபுள் கூட வெடிக்கவில்லை. மற்றொரு பயனர் நகைச்சுவையாக யூ-தேவின் இந்த சாதனை உண்மையில் ஆச்சர்யம் தான் என்றார். 

Also read... தனது தங்கைக்கு சூப்பராக சப்ரைஸ் கொடுத்து அசத்திய சகோதரர் - நெகிழ்ச்சி சம்பவம்!

சாதனை சான்றை வழங்கும் அதிகாரிகளால் அந்த பெரிய பபுளுக்குள் உள்ள சிறிய பபுள்களின் எண்ணிக்கையை எவ்வாறு கணக்கிட முடிந்தது என்று பலர் ஆச்சரியப்பட்டனர். கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் (Guinness World Records) அதிகாரப்பூர்வ Facebook ஹாண்டிலில் அந்த வீடியோவை மெதுவான இயக்கத்தில் பார்த்ததாகவும், ஒரு கிளிக்கரை பயன்படுத்தி மொத்த குமிழிகளின் எண்ணிக்கையை எண்ணும் நேரத்தை எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். மற்றொரு பயனர் அந்த பபுள்களை எண்ணிய நபர் தான் உண்மையில் பாராட்டுக்குரியவர் என்றார். மற்றொரு நபர் இந்த வீடியோ சூரியனுக்குள் எத்தனை வியாழன்களை பொருத்த முடியும் என்பதற்கான ஒரு பிரதிநிதித்துவமாக தான் இதை பார்ப்பதாக நகைச்சுவையாக கருத்து தெரிவித்ததார். 

மேலும் ஒரு பயனர், “என்னால் பார்க்கக்கூடிய பபுள்ஸ்களை நான் பார்த்து எண்ணுகிறேன் அதற்கே எனக்கு மூச்சு முட்டுகிறது. ஆனால் சாதனை படைத்த நபரின் மூச்சை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை என  கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: