முகப்பு /செய்தி /உலகம் / ஒரு நாளைக்கு 30 கேன் - பெப்சிக்காக ஆண்டுதோறும் ரூ.6.7 லட்சம் செலவு செய்த நபர்

ஒரு நாளைக்கு 30 கேன் - பெப்சிக்காக ஆண்டுதோறும் ரூ.6.7 லட்சம் செலவு செய்த நபர்

பெப்சிக்கு அடிமையான நபர்

பெப்சிக்கு அடிமையான நபர்

அளவுக்கு அதிகமாக இவ்வளவு குளிர்பானத்தை குடிப்பது உடலின் முக்கிய பாகங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர் டேவிட் கூறியுள்ளார்.

  • Last Updated :

ஒரு நாளைக்கு தன்னால் 30 கேன் பெப்சி பாணத்தை குடிக்க முடியும் என பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெப்சி பிரியர் அசால்ட்டாக கூறுகிறார்.

பிரிட்டன் நாட்டின் நார்த் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஆன்டி க்யூரி. இவர் தன்னை பெப்சி குளிர்பானத்தின் மாபெரும் அடிமை எனக் கூறிக் கொள்கிறார். தனது 20 ஆவது வயது முதல் பெப்சி அருந்த ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், இதுவரை சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் கேன் பெப்சிகளை இவர் குடித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு தன்னால் சராசரியாக 30 கேன் பெப்சி குடிப்பேன் எனக் கூறும் இவர், இதுவரை பெப்சி வாங்க மட்டும் ஆண்டுக்கு ரூ.6.7 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் இவரது உடல் எடை 120 கிலோவை தாண்டி மிக மோசமான உடல் நிலைக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், தனது உடல் நலனை சீராக்க லண்டனைச் சேர்ந்த தெரப்பிஸ்டான டேவிட் கில்முரி என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் ஆன்டி க்யூரிக்கு ஹிப்னாடிச சிகிச்சை வழங்கி பெப்சி மீதான மோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த சிகிச்சைக்குப் பின்னர் சுமார் 12 கிலோ எடையை குறைத்துள்ள க்யூரி, ஒரு மாத காலமாக பெப்சி குடிப்பதை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இப்போது தான் தண்ணீரை அதிகம் விரும்பிக் குடிப்பதாகவும், தனது சருமம் முன்பை விட நன்றாக இருப்பதாக மனைவி பாராட்டுவதாக க்யூரி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே விரலில் 130 கிலோ தூக்கி கின்னஸ் உலக சாதனை - அசத்தல் மனிதர் இவர்தான்

இது போன்று குளிர்பானங்களுக்கு அடிமை ஆவது மிகவும் ஆபத்தானது எனக் கூறும் மருத்துவர் டேவிட் கில்முரி, இவ்வளவு பெப்சியை இவர் குடிப்பதாக கூறியதை கேட்டதும் தான் முதலில் அதிர்ச்சியடைந்ததேன் என்கிறார். அளவுக்கு அதிகமாக இவ்வளவு குளிர்பானத்தை குடிப்பது உடலின் முக்கிய பாகங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர் டேவிட் கூறியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Pepsi, UK