Home /News /international /

கொரோனா பாதிப்பால் ஆண் உறுப்பின் அளவு சிறிதானது; விறைப்பு குறைபாடு - இளைஞர் பகீர் தகவல்

கொரோனா பாதிப்பால் ஆண் உறுப்பின் அளவு சிறிதானது; விறைப்பு குறைபாடு - இளைஞர் பகீர் தகவல்

Post Covid

Post Covid

30 வயதாகும் இளைஞர், கொரோனாவுக்கு பின்னதாக தனது ஆண் உறுப்பின் அளவு சிறிதாகிவிட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனது   பிறப்பு உறுப்பின் அளவு சிறிதானதாகவும், விறைப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பதாகவும் இளைஞர் ஒருவர் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு பலருக்கு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுவது ஒரு புறம் இருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தாலும் கூட சிலருக்கு தற்காலிகமான மற்றும் சிலருக்கு நிரந்தரமான உடல் நலக் கோளாறுகளை கொரோனா விட்டுச் செல்கிறது. அந்த வகையில், 30 வயதாகும் இளைஞர், கொரோனாவுக்கு பின்னதாக தனது ஆண் உறுப்பின் அளவு சிறிதாகிவிட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால், தனக்கு நேர்ந்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார், அதன்படி, அவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அவருக்கு long covid எனப்படும் நீண்டகால கொரோனா பாதிப்பு இருந்துள்ளது., பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். கொரோனா பாதிப்புக்கு பின்னர் தனது ஆண்குறியின் அளவு குறைந்துள்ளதை கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

    Also read:  43வயது மெக்கானிக்கை கொலை செய்து ஆண் உறுப்பை வெட்டி சாப்பிட்ட ஆசிரியர்

    கொரோனா பாதிப்புக்கு முன்னர் எனது ஆண் குறி இயல்பான அளவை விட சற்று பெரியதாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒன்றரை இஞ்ச் அளவுக்கு எனது ஆண்குறியின் அளவு சிறிதாகிவிட்டது. தற்போது இயல்பான அளவை விட சிறியதாக என்னுடைய ஆண்குறி இருக்கிறது. விறைப்புத்தன்மையும் குறைந்துவிட்டது. இது தொடர்பாக எனது மருத்துவரிடம் தெரிவித்தேன், அவர் இந்த பாதிப்பு நிரந்தரமானதாக இருக்கலாம் என தெரிவித்தார். செக்ஸ் விஷயத்தில் என்னுடைய தன்னம்பிக்கை குறைந்துவிட்டது” இவ்வாறு அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

    Also read:  ஓமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

    அமெரிக்க சிறுநீரக மருத்துவர் ஆஷ்லே வின்டர் இது குறித்து பேசுகையில், கொரோனா ஆண்குறியின் இரத்த ஓட்டத்தில் நுழைய முடியும் என்பதற்கான சாத்தியமான ஆதாரம் இது. வைரஸிலிருந்து ஆண்குறிக்கு சரியான இரத்த ஓட்டம் ஏற்படலாம், இது விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்த இரண்டு ஆண்களின் ஆண்குறியில் இன்னும் அதன் தடயங்கள் இருந்தன. இரு ஆண்களும் பாதிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Sex

    அடுத்த செய்தி