ஹோம் /நியூஸ் /உலகம் /

கிரிப்டோகரன்சி கிளாஸ் எடுத்து யூடியூபில் மாதம் 15 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த நபர்

கிரிப்டோகரன்சி கிளாஸ் எடுத்து யூடியூபில் மாதம் 15 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த நபர்

யூடியூப் சேனல் ஆரம்பித்த நபர்

யூடியூப் சேனல் ஆரம்பித்த நபர்

ஒரு சிறந்த நிறுவனத்தில் முதலீட்டு வங்கி ஆய்வாளராகப் பணிபுரிந்த பென் சோன் என்பவர், வேலையை விட்டுவிட்டு கிரிப்டோகரன்சி பற்றி விளக்க யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் முன்னேறி காட்டி உதாரணமாகி உள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

குடும்ப சூழ்நிலை மற்றும் வருமானம் காரணமாக பலர் தங்களது கனவு வேலையை விட்டுவிட்டு, கிடைத்த வேலைக்கு செல்வதுண்டு. இருப்பினும் அதில் சிலர் தங்கள் வருமானத்திற்கு நிகரான வேலையை விட்டு சொந்த கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற தைரியமான முடிவுகளை எடுப்பர். சிலர் அதில் வெற்றியும் அடைந்திருப்பர். ஏனெனில், எல்லோராலும் அவர்களின் கனவு வேலையில் சாதிக்க முடியும் என்று சொல்ல முடியாது.

தைரியத்துடனும், விடாமுயற்சியுடனும் தங்களது கனவுகளை நோக்கி பல தடைகளை தாண்டி ஓடவேண்டி இருக்கும். அந்த வகையில், இங்கு ஒரு நபர், தனது வேலையை விட்டுவிட்டு தனது சொந்த தொழிலுக்கு முதலாளியாக இருக்க முடிவு செய்தார். இப்போது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரது கதையை பற்றி தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். ஒரு சிறந்த நிறுவனத்தில் முதலீட்டு வங்கி ஆய்வாளராகப் பணிபுரிந்த பென் சோன் என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் தனது வேலையை விட்டுவிட முடிவு செய்தார்.

அவரது தாயார் ALS நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார். அதன்பின் அவர் வேறு எந்த வேலையையும் செய்யவில்லை. தனது வேலையை விட்டு வெளியேறிய பிறகு, சோன் தனது கனவு வேலைக்கான சொந்த விதியை உருவாக்க முடிவு செய்தார்.

"பென் ரேரிலிக்விட்" என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினார். மேலும் அந்த சேனலில் நிதி உலகில் தனக்குத் தெரிந்தவற்றில் கவனம் செலுத்தி அதனை விளக்க முடிவு செய்தார். நிதி, தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்ஸிகளில் ஒருவர் எவ்வாறு தங்கள் தொழிலை உருவாக்கலாம் மற்றும் வளர்க்கலாம் என்பதைப் பற்றி அவர் தனது சேனலில் பேசத் தொடங்கினார்.

ALSO READ |  அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

இப்போது, ​​பென் சோன் தனது சேனல் மூலம் 71000 சந்தாதாரர்களுடன் அதாவது subscribers-களுடன் ஒரு தொழில்முறை யூடியூபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இது மட்டுமின்றி, அவர் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் $26,000 அமெரிக்க டாலர்களை சம்மதித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 17 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கணக்கிடப்படுகிறது.

தனது YouTube சேனல் மூலம், ஸ்டாக்ஸ், தொழில்கள் மற்றும் கிரிப்டோகரன்ஸிகள் பற்றி சோன் தன்னை பின்தொடர்வபர்களுக்கு அறிவுரை வழங்கினார். இது குறித்து பிசினஸ் இன்சைடர் பத்திரிகையிடம் சோன் கூறியதாவது, "நான் உண்மையில் ரேரிலிக்விட்-ஐ ஒரு YouTube சேனலாக பார்க்கவில்லை. முழு வணிகத்திலும் உள்ள பல்வேறு வருவாய் நுணுக்கங்கள் மற்றும் மினி வணிகங்களுக்கான நிறைய யோசனைகள் என்னிடம் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ |  6 மாசத்துல எப்படிம்மா குழந்தை.. மருமகளை விரட்டியடித்த மாமியார் - நீதிமன்றத்தில் வெளிவந்த மாப்பிள்ளையின் லீலை

அவரது குறிப்பிடத்தக்க வீடியோ பதிவுகள் அவருக்கு பிராண்ட் ஸ்பான்சர்ஷிப்கள், விளம்பரம், ரெஸ்யூம் ஆலோசனை மற்றும் பாடநெறி வழங்கல் ஆகியவற்றைப் பற்றியும் பேசுமாறு வாய்ப்புகளை வழங்கியது. அதுவே, இந்த ஆண்டு ஜூலையில் $19,000க்கு மேல் சம்பாதிக்க அவருக்கு உதவியது. தான் எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதை விரும்புவதாக சோன் வெளிப்படுத்தினார். மேலும் தனது அறிவை மற்ற சக முதலீட்டாளர்களுக்கு தனது சேனல் மூலம் வழங்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

யூடியூபராக தனது அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், "இப்போது நான் யூடியூப்பிற்கு மாறியுள்ளதால், மாணவர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் என்னால் கற்பிக்க முடிகிறது. அதேசமயம், மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில், எனது குடும்பத்தின் பல்வேறு வருமான ஓட்டங்களுக்கு வழிவகுத்தது." அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், சோன் தனது சேனல் மூலம் 17 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்தார். அவரின் விடாமுயற்சி பலருக்கு ஒரு பாடமாகவே அமைத்துள்ளது.

First published:

Tags: Youtube