ஹோம் /நியூஸ் /உலகம் /

செல்ல நாய்க்காக 42 கோடி செலவு செய்த அமெரிக்கர்..!

செல்ல நாய்க்காக 42 கோடி செலவு செய்த அமெரிக்கர்..!

செல்ல நாய்க்காக 42 கோடி செலவு செய்த அமெரிக்கர்..!

செல்ல நாய்க்காக 42 கோடி செலவு செய்த அமெரிக்கர்..!

நாய்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்காவின் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிபவர் டேவிட் மேக்நெய்ல் இவர் ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

  சமீபத்தில் அந்த நாய்க்கு இதயத்தில் கட்டி,  அதனைத் தொடர்ந்து ரத்தக் குழாயில் புற்றுநோயும் இருந்தால் கடுமையாக அவதிப்பட்டு வந்தது. நாய்க்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. சிகிச்சைகளுக்குப் பின் நாய் பூரண குணமடைந்து தற்போது நலமுடன் இருக்கிறது.

  தான் ஆசையாக வளர்த்த நாய் தற்போது குணமடைந்து ஆரோக்கியமாக இருப்பதால் தீராத மகிழ்ச்சியில் இருக்கும் டேவிட் நாயைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அதற்காக அவர்களை கவுரவிக்கும் விதமாக சூப்பர் பவுல் கால்பந்து போட்டியில் நாய்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

  அந்த விளம்பரத்தில் விலங்குகள் நோய்க்கான ஆராய்ச்சிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை அவர் கேட்பது போல் அந்த வீடியோவை உருவாக்கியுள்ளார். இதனால் விஸ்கான்ஸின் என்ற அந்த கால்நடை மருத்துவமனையின் மருத்துவக் கல்லூரிக்கு மக்கள் நன்கொடை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த விளம்பரத்திற்காக டேவிட் செய்திருக்கும் 42 கோடி டேவிட் செலவு செய்திருப்பது அங்கிருக்கும் மக்களிடையே ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அதோடு தான் வளர்க்கும் நாயின் மீது கொண்டிருக்கும் அலாதியான அன்பும் வெளிப்படுகிறது. இதனால் பணம், மனம் என இரண்டையும் விஞ்சியுள்ளது அவரது குணம்.

  Published by:Sivaranjani E
  First published: