சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஐ-போன்

ஐ-போன்

சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ஷ்டவசமாக ஐ-போன் இலவசமாக கிடைத்துள்ளது.

 • Last Updated :
 • Share this:
  இங்கிலாந்தில் ட்விக்கன்ஹாம் பகுதியில் வசிக்கும் நிக் ஜேம்ஸ் (50), டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் தனது வீட்டிற்கு ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஆர்டர் செய்த பழங்களை அருகில் உள்ள டெஸ்கோ ஸ்டோருக்கு சென்று பெற்றுள்ளார். அப்போது, கடையின் ஊழியர் ஜேம்ஸிடம் பையின் உள்ளே உங்களுக்கு ஒர் ஆச்சர்யம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

  இதைத்தொடர்ந்து, தயக்கத்துடன் கடை ஊழியர் தந்த பையை திறந்து பார்த்த ஜேம்ஸ், உள்ளே ஐ-போன் இருப்பதை பார்த்து திகைத்து போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நிக் ஜேம்ஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, டெஸ்கோவிற்கும், டெஸ்கோ அளித்த மொபைலுக்கும் பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டெஸ்கோவில் நான் ஆர்டெர் செய்த ஆப்பிள் பழங்களை பெறுவதற்கு சென்றிருந்தேன்.

  அங்கு அதிர்ஷ்டவசமாக ஆப்பிள் ஆர்டர் செய்த எங்களுக்கு ஆப்பிள் ஐ-போன் கிடைத்தது. கடையின் ஊழியர் உள்ளே உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருப்பதாக தெரிவித்தபோது, நான் பையின் உள்ளே ஈஸ்டருக்காக முட்டைகள் அல்லது வேறு எதேனும் இருக்கும் என்று தான் என்னினேன். எனினும், ஐ-போன் இருப்பதை பார்த்து திகைத்துபோனேன் என்று தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்தில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் தனது வாடிக்கையாளரை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட புதிய விளம்பர யுக்தியின் ஒரு பகுதியாக ஐ-போன் பரிசு வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: