Home /News /international /

ரஷ்யா தூதரகம் முன் பற்றி எரிந்த கார் - திட்டமிட்ட தாக்குதலா? ருமேனியாவில் பரபரப்பு...

ரஷ்யா தூதரகம் முன் பற்றி எரிந்த கார் - திட்டமிட்ட தாக்குதலா? ருமேனியாவில் பரபரப்பு...

சர்வதேச போர் விதிகளை மீறியதாகக் கூறி ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 10 அதிகாரிகளை ருமேனியாவை விட்டு வெறியேற்ற ருமேனிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதன் தாக்கம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எதிரொலித்து வருகிறது. ரஷ்ய அரசை கண்டித்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகத்தை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அண்மை நாட்களில் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் உள்ள ரஷ்ய தூதரக வாயிலுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரை கொண்டுவந்து மோதியுள்ளார். அந்த கார் வாயில் கதவில் மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்த தொடங்கியது. அன்றிலிருந்து இதுவரை உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவுக்குள் சுமார் 6.24 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

    சர்வதேச போர் விதிகளை மீறியதாகக் கூறி ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 10 அதிகாரிகளை ருமேனியாவை விட்டு வெறியேற்ற ருமேனிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இலங்கையில் அவசர நிலை பிரகடனம் வாபஸ்: அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நேட்டோ(NATO) நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துவரும் நிலையில், ரஷ்யா மீது தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடை விதித்து வருகின்றன. மேலும், உக்ரைன் நாட்டிற்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளையும் இந்நாடுகள் வழங்கிவருகின்றன.

    பொது மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி போர் குற்றத்தில் ஈடுபடும் ரஷ்யா மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    அதேவேளை, இவ்விவகாரத்தில் இந்திய அரசு ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல், இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை எட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி