வெறும் 16 விநாடிகள் முகக்கவசத்தை கழட்டியதற்காக இங்கிலாந்தில் நபர் ஒருவருக்கு 2 லட்சம் அபராதம் விதித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிறிஸ்டோபர் என்பவர் B&M ஸ்டோர்ஸ் என்ற கடையில் மாஸ்க் அணிந்து, ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது, சற்றே உடல் நலம் சரியில்லை என்பதால் சிறிது நேரம் மட்டும் மாஸ்க்கை கழட்டி மாட்டியுள்ளார். அதுக்கு தண்டனையாக இப்போது 2 லட்சம் அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். என்னுடைய முழு ஊதியத்தை வைத்து கூட அந்த அபராத தொகையை என்னால் கட்ட முடியாது என புலம்பி வருகிறார்.
உலகை உலுக்கி எடுத்த கொரோனா தொற்று வல்லரசு நாடான இங்கிலாந்தையும் புரட்டி எடுத்தது. முதல் மற்றும் இரண்டாவது அலையில் இங்கிலாந்து முழுவதும் லட்சக்கணக்கோர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். இதையடுத்து ஒமைக்ரான் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படியுங்கள் : 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிகாலத்தினர் சமைத்து சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா?
கொரோனாவின் தீவிரம் மற்றும் அபராத தொகை காரணமாக இங்கிலாந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினர். இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஓ’டூல் என்ற நபர், ப்ரெஸ்காட்டில் உள்ள பி அண்ட் எம் என்ற ஸ்டோருக்கு சில பொருட்களை வாங்குவதற்காக முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார். கடைக்குள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், சில விநாடிகளுக்கு தனது மாஸ்க்கை கழட்டி, மாட்ட நினைத்துள்ளார்.
வெறும் 16 விநாடிக்கு தனது மாஸ்க்கை கழட்டி, சத்தமில்லாமல் மீண்டும் பழைய நிலைக்கு மாட்டிக்கொண்டுள்ளார். கிறிஸ்டோபரின் போதாத நேரம், அந்த சமயத்தில் கடைக்குள் நுழைந்த போலீசார் அவர் மாஸ்க் இல்லாமல் இருப்பதை பார்த்துவிட்டனர். தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சில விநாடிகள் மட்டுமே மாஸ்கை கழட்டியதாக கிறிஸ்டோபர் தனது நிலையை விளக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள் : டெல்டா வேரியன்டை மீண்டும் மனிதர்களுக்கு பரப்பும் ஹாம்ஸ்டர்கள்.! ஆய்வில் வெளியான பகீர் தகவல்
ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத போலீசார், அவர் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஏதோ சாக்கு, போக்கு சொல்வதாக நினைத்துள்ளனர். சில நாட்கள் கழித்து ACRO குற்றப் பதிவு அலுவலகத்திலிருந்து கிறிஸ்டோபருக்கு 100 டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்டு ஒரு கடிதம் வந்துள்ளது. அதனை ஏற்க மறுத்த கிறிஸ்டோபர் தான் எந்த தவறும் செய்யவில்லை என விளக்கி மெயில் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அபராதத்தை ரத்து செய்துவிடுவார்கள் என காத்திருந்த கிறிஸ்டோபருக்கு மற்றொரு கடிதம் வந்துள்ளது, அதனை பார்த்த மனிதர் கண்களில் கண்ணீர் அருவியை கொட்டியிருக்கிறது. காரணம் வெறும் 16 விநாடிகள் மாஸ்க் அணியாததற்காக 2 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி கடிதம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாளிதழ்களில், போலீசாரிடம் கிறிஸ்டோபர், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பது பற்றி தனக்கு கவலை இல்லை என்பது போன்றும், அசெளகரியமாக இருந்ததால் சிறிது நேரம் கழட்டியதாகவும் பதிலளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் - ஆய்வாளர்களின் நம்பிக்கையை மாற்றிய புதிய ஆய்வு
இரண்டாவது கடிதத்தால் நொந்து போயுள்ள கிறிஸ்டோபர் பேசமா 100 டாலரையே அபராதமாக கட்டியிருக்கலாம். வாயை கொடுத்து இப்போ 2000 டாலர் கட்ட சொல்லிவிட்டார்களே என அதிர்ச்சியில் உள்ளார். மேலும் தனது முழு சம்பளத்தையும் வைத்து கூட இந்த அபராத தொகையை ஈடுகட்ட முடியாது என்றும் வேதனையுடன் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.