தலைவலி நம்மில் பலருக்கு உள்ள பிரச்சினை தான். சிலர், “தலை வலிக்குது, ஒரு டீ குடித்தால் நல்லா இருக்கும்’’ என்று கூட சொல்வது உண்டு. ஆம், சாதாரண தலைவலி என்பது சூடாக ஒரு பானம் அருந்தினாலோ அல்லது நன்றாக தூங்கி எழுந்தாலோ அல்லது ஒரு தலைவலி மாத்திரை பயன்படுத்தினாலோ காணாமல் போய்விடும்.
ஆனால், சிலருக்கு நாள்பட்ட தீராத தலைவலி இருக்கும். பொதுவாக இதுபோன்ற தலைவலி என்பது மைகிரேன் என்ற பாதிப்பு காரணமாக அல்லது தலையில் கட்டி இருப்பதன் காரணமாக ஏற்படும். பெரும்பாலான தலைவலிகளுக்கு மருந்து மற்றும் சிகிச்சை மூலமாக நிவாரணம் உண்டு. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தீராத தலைவலி, நிரந்தரமாக தங்கி விடுவது உண்டு.
இதேபோலத்தான் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலி இருந்தது. இது எதனால் ஏற்படுகிறது என்பதே தெரியாமல் ஒவ்வொரு நாளும் வலியோடு வாழ்ந்து வந்தார் அவர். நன்றாக தூங்கி எழுந்தாலும் கூட அவருக்கு தலைவலி என்பது இருந்து கொண்டே இருந்தது.
Also read: கஞ்சாவால் ஏற்பட்ட மனநல பாதிப்பில் ஆணுப்பை அறுத்துக்கொண்ட இளைஞர்
இறுதியாக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது மண்டை ஓட்டில் புல்லட் ஒன்று சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆச்சரியம் என்ன என்றால், தனது தலையில் புல்லட் எப்படி வந்தது என்பது குறித்து அவருக்கும் காரணம் தெரியவில்லை.
தற்போது இந்த நபருக்கு 28 வயது ஆகிறது. தனக்கு 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரரும், தானும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கிறார் அவர்.
இதையும் படிங்க:அமெரிக்க படைகள் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் உயிரிழப்பு... அதிபர் ஜோ பைடன் தகவல்
சின்ன வயதில் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது குறித்து ஞாபகம் இருக்கிறது என்றும், ஆனால், தலை முடியை வைத்து மறைத்து தனது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில், “சுமார் 0.5 செ.மீ முதல் 1 செ.மீ. அளவு கொண்டதாக இந்த புல்லட் இருந்தது. இவர் இவ்வளவு நாட்களாக இந்த புல்லட்டுடன் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனினும், புல்லட் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்காமல், வெளிப்புறத்திலேயே இருந்ததால், இவருக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லாமல் இருந்திருக்க கூடும்’’ என்று தெரிவித்தனர்.
மேலும் படிங்க: ராணுவ வீரரையா ஒலிம்பிக் ஜோதியை ஏந்தச் செய்வது?- இந்திய கண்டனத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு
மேலும், “பொதுமக்கள் யாராயினும் லேசான தலைவலி என்றால், அதுவும் எப்போதாவது வந்தால் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு கடந்து செல்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், நாள்பட்ட தலைவலி இருந்தால் அதை புறக்கணிக்க கூடாது. கட்டாயம், உரிய மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.