நம்ப முடியாத பல வீடியோக்கள் இன்டர்நெட்டில் உலா வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. சில நேரங்களில் நம்மை ஒருகணம் திகைக்க வைத்து விடுகின்றன. அதிலும் மிக பெரிய அளவிலான உணவுகளை வேக வேகமாக சாப்பிட்டு முடிக்கும் சில சாப்பாட்டு பிரியர்களின் வேகமும், திறமையும் கொண்ட ஈட்டிங் சேலஞ்ச் வீடியோக்கள் நம்மை எப்போதுமே ஆச்சர்யப்பட வைக்க கூடியவை. ஒரு சில நொடிகளில் பெரிய உணவு பகுதிகளை சாப்பிடுவதிலிருந்து பட்டங்களை வெல்ல அதிக அளவிலான உணவை சில நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பது வரை, இந்த உணவு போட்டிகளை நெட்டிசன்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
அந்த வகையில் 20,000 கலோரி பர்கரை வெறும் ஒரு சில நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பது பற்றி உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சமீபத்தில் லாஸ் வேகாஸ் நகரத்தில் ஹாம்பர்கர் என்ற பகுதியில் இருக்க கூடிய உணவகமான ஹார்ட் அட்டாக் கிரில்லில் (Heart Attack Grill), ஆக்டபிள் பைபாஸ் சேலஞ்ச் (Octuple Bypass challenge) நிகழ்வு நடந்தது. இந்த சவாலில் பங்கேற்ற ஒருவர் வெறும் நான்கே நிமிடங்களில் மிக பெரிய பர்கரை சாப்பிட்டு முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
ஹார்ட் அட்டாக் கிரில் ரெஸ்டாரன்டின் ஆக்டோப்பிள் பைபாஸ் சேலஞ்ச் மற்ற உணவு சவால்களிலிருந்து வேறுபட்டது. இந்த சவாலுக்காக தயார் செய்யப்பட்ட 20,000 கலோரி பர்கர் மொத்தம் 2.94 கிலோ எடை கொண்டது.
ALSO READ | உலகின் வேகமான ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்களுக்கு எலும்புகள் முறிந்ததால் அதிர்ச்சி!
இந்த பிரமாண்ட பர்கர் 40 பன்றி இறைச்சி துண்டுகள், 16 துண்டுகள் சீஸ், ஒரு முழு வெங்காயம், இரண்டு தக்காளி, மிளகாய் மற்றும் ரொட்டி உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இந்த பிரம்மாண்டமான பர்கரை வெறும் 4 நிமிடங்களிலேயே சாப்பிட்டு முடித்து விட்டார் மாட் ஸ்டோனி (Matt Stonie) என்ற 29 வயது இளைஞர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல சாப்பாட்டு போட்டியாளரான மாட் ஸ்டோனி, சமீபத்தில் லாஸ் வேகாஸில் இருக்கும் ஹார்ட் அட்டாக் கிரில்லில் நடைபெற்ற ஆக்டிபிள் பைபாஸ் சேலஞ்சில் பங்கேற்று மேற்கண்ட பெரிய அளவிலான பர்கரை வெறும் 4:10 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து உள்ளார். தனது சாதனை வீடீயோவை தனது யூடியூப் சேனலில் அப்லோட் செய்து இருக்கிறார் மாட் ஸ்டோனி. இவர் யூடியூபில் சுமார் 14.6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார்.
4 நிமிடங்களில் தான் சாப்பிட்ட மிக பெரிய பர்கர் வீடியோவை பதிவேற்றி அதில், மிகி சுடோ என்ற நபர் 7:42 நிமிடங்களில் இவ்வளவு பெரிய பர்கரை சாப்பிட்டது தான் இதற்கு முன்னர் கடைசியாக படைக்கப்பட்டுள்ள உலக சாதனை என்று கூறி இருக்கிறார்.
ALSO READ | மான்டேரி விரிகுடாவில் சுற்றித்திரியும் சுமார் 90 அடி நீளமுள்ள அரியவகை திமிங்கலங்கள்!
இந்த வீடியோவை இதுவரை 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து அவரது சாப்பிடும் திறனை கண்டு வாயடைத்து போயுள்ளனர். இந்த பெரிய பர்கரின் பாதியை தங்களால் சாப்பிட்டு முடிக்க முடியாது, இவர் ஒரு லெஜெண்ட், இந்த வீடியோவின் மூலம் அவருடைய வலியை என்னால் உணர முடிகிறது என்று பலரும் பல கமெண்ட்ஸ்களை செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.