ஹோம் /நியூஸ் /உலகம் /

வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு ஆண் குழந்தை...!

வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு ஆண் குழந்தை...!

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு, குழந்தை பிறந்த நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளது.

  இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக தெற்கு மாத்தறை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தாடியுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி வைத்தார்.

  ஆண்கள் வார்டில் அவரை பரிசோதித்த மருத்துவர், வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறி இருந்ததால் அதிர்ச்சியடைத்து சோதனை செய்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், அவர் இருக்க, உடனே அவரை பிரசவ வார்டுக்கு அனுப்பினார்.

  தாடி, மீசையுடன் ஒருவர் பிரசவ வார்டுக்கு வந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், பெண்ணாக பிறந்த அந்த நபர் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களைப் போலவே வாழ்ந்து வந்துள்ளார். தாடி, மீசை வளர்ந்ததற்கும் காரணம் அதுதான்.

  எனினும், அவர் மனதளவில் ஆணாக இருந்தாலும் உடல் அளவில் ஒரு பெண் தான். அதனால் அறிவியல் ரீதியாக அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும், குழந்தைக்கு அவர் பால் எதுவும் கொடுக்க முடியாத நிலை இருப்பதால், தற்போதைக்கு மருத்துவமனை குழந்தையை கவனித்து வருகிறது.

  தான் அந்த குழந்தையை வளர்க்க விரும்ப வில்லை என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது அடையாள அட்டைகளை பார்க்கும் போது அவர் ஆண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநராக உள்ள அவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Sankar
  First published: