பால் பவுடர் வைத்திருந்ததால் 15 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற இளைஞர்..!

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சிறைபிடிப்பு.

பால் பவுடர் வைத்திருந்ததால் 15 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற இளைஞர்..!
கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சிறைபிடிப்பு.
  • News18
  • Last Updated: October 22, 2019, 3:45 PM IST
  • Share this:
வாழ்க்கையில் பலரும் தவறுகள் செய்வது இயல்பு. அவற்றில் சில கண்டிக்கக் கூடியதாக இருக்கலாம். சில வயிறு வலிக்க சிரிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நபருக்குக் கிடைத்திருக்கும் தண்டனை சிரிப்பதா பரிதாபப்படுவதா என நினைக்க வைக்கிறது.

அமெரிக்காவின் ஒக்லாஹோமா என்ற இடத்தில் க்ரெக் என்ற 26 வயதான இளைஞர் வீடில்லாமல் தெருவோரத்தில் வசித்து வந்துள்ளார். அவர் தன்னுடைய பையில் ஒரு கவர் முழுவதும் வெள்ளை நிறப் பவுடர் வைத்துள்ளார். அதைக் கண்ட போலீஸ் போதை பொருள் (கொக்கைன்) என அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஆனால், க்ரெக் மறுத்தும் போலீசார் கைது செய்தனர்.

மறுநாள் நீதிமன்றம் அழைத்துச் செல்ல.. அங்கு க்ரெக் தான் போதைப்பொருளை வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார். அதன்பிறகு இரண்டு மாதங்கள் சிறை தண்டனைக்குப் பின் மீண்டும் நீதிமன்றம் அழைத்துச் சென்றபோது போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறியுள்ளார்.


சட்டத்திற்கு புறம்பாக பை நிறைய போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 15 வருட சிறைத் தண்டனையை விதித்தது நீதிமன்றம்.பின் அவர் வைத்திருந்த போதைப்பொருளை உறுதி செய்ய பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போதுதான் தெரிய வந்துள்ளது அவர் பை நிறைய வைத்திருந்தது பால் பவுடர் என்று...பின் அவருக்கு இழைக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இண்டிபெண்டண்ட் செய்திக் குறிப்பு படி அவர் ஒக்லாஹோமா சிறையில் விசாரிப்பு முறைகளுக்கு பயந்து  ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார். நல்ல வேளையாக பரிசோதனையால் தன் வாழ்க்கை மீட்கப்பட்டுள்ளதாக க்ரெக் கூறியுள்ளார்.

பார்க்க :

ரகுல் ப்ரீத் சிங் ஒரு நடிகையின் டைரி…

First published: October 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்