முகப்பு /செய்தி /உலகம் / 31 நாட்களாக பூச்சி, புழுக்கள்தான் உணவு... அமேசான் காட்டில் உயிர்தப்பிய நபரின் திகில் அனுபவம்!

31 நாட்களாக பூச்சி, புழுக்கள்தான் உணவு... அமேசான் காட்டில் உயிர்தப்பிய நபரின் திகில் அனுபவம்!

ஜொனாட்டன் அகோஸ்டா

ஜொனாட்டன் அகோஸ்டா

அமேசான் காடுகளில் தொலைந்த 30 வயது நபர் 31 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaBolivia Bolivia Bolivia Bolivia

பொலிவியாவை சேர்ந்த 30 வயது உடைய ஜொனாட்டன் அகோஸ்டா என்ற நபர் அமேசான் காடுகளில் நண்பர்களுடன் வேட்டைக்குச் செல்லும் போது காட்டிற்குள் வழி தவறி சென்றுள்ளார். அவரை 31 நாட்கள் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர். உயிர் தப்பிக்கப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் சாப்பிட்டு வாழ்ந்து வந்தாக அவர் கூறியுள்ளார்.

அமேசான் காடு மிகப் பெரிய அளவில் பல உயிரினங்களைக் கொண்ட காடு. இந்த காட்டில் வேட்டைக்காக 4 நண்பர்களுடன் வட போலிவியா பகுதியில் ஜொனாட்டன் அகோஸ்டா சென்றுள்ளார். அப்போது காட்டிற்குள்ளே வழி மாறி சென்றுவிட்டார். அவர் தொலைந்ததை அறிந்த அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் எங்குத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சுமார் 30 நாட்கள் கடந்த நிலையில் தற்போது அவரை உள்ளூர் வாசிகள் மீட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் கதைகேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

31 நாட்களாக வெறும் பூச்சி மற்றும் புழுக்களைச் சாப்பிட்டு உயிர் தப்பியுள்ளார். மேலும் தனது ஷூவை வைத்து மழை நீரைச் சேகரித்துக் குடித்து வந்துள்ளார். இது தவிர சில நேரங்களில் காட்டில் உள்ள கொடூரமான விலங்குகளிடம் இருந்து மறைந்து தப்பி ஓடியுள்ளார்.

பல நாட்களாக நடந்துகொண்டே இருந்த நிலையில் உள்ளூர் மக்கள் சிலரைப் பார்த்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர்கள் குரல் கேட்டு அந்த பக்கம் சென்ற உள்ளூர் ஆட்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர் தப்பிப்பதற்கான பல விதமான வழிகளைப் பயன்படுத்தி ஒருவழியாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Also Read : உலகில் இப்படி கூட இரட்டையர்கள் இருக்க முடியுமா? கின்னஸ் சாதனை படைத்த சகோதரிகள்..

காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டு குடும்பத்தார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தார்கள் அவரை வந்து சந்தித்துள்ளனர். 31 நாட்களில் சுமார் 17 கிலோ எடை குறைந்துள்ளார் என்றும் உடலில் நீர் அளவு மிகவும் குறைவதாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதம் கழித்து அமேசான் காட்டில் உயிருடன் மீட்கப்பட்ட ஜொனாட்டன் அகோஸ்டா-வை பலரும் உருக்கமாக நலம் விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Amazon Forest, Trending News