முகப்பு /செய்தி /உலகம் / “நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்”... தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்... மக்கள் அதிர்ச்சி..!

“நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்”... தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்... மக்கள் அதிர்ச்சி..!

கைதான நபர்

கைதான நபர்

நிர்வாணமாக நடந்து சென்ற நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • intern, IndiaFloridaFloridaFloridaFlorida

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு நபர் மக்கள் நடமாட்டுள்ள தெருவில் நிர்வாணமாக நடந்து சென்று பரபரப்பை கிளப்பியுள்ளார். அம்மாகாணத்தின் வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரான ஜேசன் ஸ்மித். இவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி அன்று வொர்த் அவென்யூ என்ற பகுதியில், ஆடைகளில் ஏதுமின்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

நிர்வாணமாக நடந்து சென்ற நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். உடனே, அங்கு விரைந்த காவல்துறை அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளது. முதலில் அந்த நபர் தனது பெயர், பிறந்த தேதி விவரங்களை தெரிவிக்கவில்லை.

தனக்கு ஏதும் அடையாளங்கள் ஏதும் இல்லை நான் வேற்று பூமியை சேர்ந்தவன் என்று கூறியுள்ளார். பதிலைக் கேட்டு திகைத்து போன போலீசார் பின்னர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள,  அவரின் பெயரும் வசிப்பிட விவரமும் தெரியவந்துள்ளது.

இவரிடம் உரிய அடையாள அட்டைகள் ஏதும் இல்லை. தனது உடைகள் எங்கே போனது எனத் தெரியவில்லை என்று அவர் போலீசிடம் கூறியுள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் 3  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மகனிடமே கத்தி முனையில் திருட முயன்று 26 மாத சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை... விநோத சம்பவம்!

இது போன்ற வினோத சம்பவங்கள் புளோரிடாவில் நடப்பது முதல்முறை அல்ல. கடந்தாண்டு இதுபோல் தான் ஒரு நபர் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவில் பாட்ர்டியில் கலந்துகொண்டுவிட்டு போதையில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் நுழைந்துள்ளார். அங்குள்ள குளியல் தொட்டிக்குள் நிர்வாணமாக தூங்கவே, அந்த வீட்டார் அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் புகார் தந்து கைது செய்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Florida, Viral News